பிரித்தானிய விசாவில் நடைமுறையாகும் புதிய திட்டம்!

பிரித்தானிய விசாவில் நடைமுறையாகும் புதிய திட்டம்!

ஐக்கிய அரபு இராச்சியம், சவூதி அரேபியா, குவைத், ஓமான், பஹ்ரைன் ஆகிய நாட்டினர் விசா இல்லாமல் பிரித்தானியாவிற்கு செல்லாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு நாட்டில் இருந்து மற்றொரு நாட்டிற்கு செல்வதற்கு கடவுச்சீட்டு, விமான பயணச்சீட்டு, ஒருவர் தங்கள் நாட்டிற்கு வரலாம் என்று அந்நாட்டு அரசு வழங்கும் அனுமதியான விசாவும் அவசியம். இதற்காக பல ஆயிரங்கள், லட்சங்களை செலவு செய்து வெளிநாடுகளுக்கு செல்கிறார்கள்.

இந்நிலையில், ஐக்கிய அரபு அமீரகம், சவூதி அரேபியா, குவைத், ஓமான், பஹ்ரைன் ஆகிய நாட்டினர் விசா இல்லாமல் பிரித்தானியாவுக்கு பெப்ரவரி, 22ம் திகதிக்கு பின் செல்லாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

2025ம் ஆண்டிற்குள் பிரித்தானிய எல்லையில் டிஜிட்டல் மயமாக்கும் நோக்கில் இந்த திட்டத்தை கொண்டு வருவதாக பிரித்தானிய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

CATEGORIES
TAGS
Share This