இன்றைய கொரோனா நிலவரம்!

இன்றைய கொரோனா நிலவரம்!

நாட்டில் கொரோனா பாதிப்பு சற்று குறைந்துள்ளது. புதன்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் புதிதாக 602 பேருக்கு இத்தொற்று உறுதி செய்யப்பட்டது.

கொரோனா பாதிப்பு காரணமாக கேரளத்தில் 2, கர்நாடகம், பஞ்சாப், தமிழ்நாட்டில் தலா ஒருவரும் உயிரிழந்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சக தரவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 602 பேர் பதிவாகியுள்ள நிலையில், மொத்த பாதிப்பு 4,50,15,136 ஆக பதிவாகியுள்ளது.

புதிய வகை கொரோனா பரவல் மற்றும் குளிா்காலம் எதிரொலியாக, நாட்டில் கடந்த மாத தொடக்கத்தில் இருந்து கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வந்த நிலையில், இரண்டு நாள்களாக மீண்டும் குறைந்து வருகின்றது. கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோா் எண்ணிக்கை 4,440 ஆக உயா்ந்துள்ளது.

ஒரேநாளில் 722 பேர் நோயிலிருந்து விடுப்பட்ட நிலையில், இதுவரை மொத்தம் குணமடைந்தோரின் எண்ணிக்கை 4,44,77,272 ஆக உயர்ந்துள்ளது.

நேற்று ஒரேநாளில் 32,946 பரிசோதனைகள் செய்யப்பட்டது. நாடு முழுவதும் இதுவரை 220.67 கோடி தவணை கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சக தரவுகளில் கூறப்பட்டுள்ளது.

CATEGORIES
TAGS
Share This