புதிய அரசாங்கத்தின் அமைச்சர்கள் விபரம்

புதிய அரசாங்கத்தின் அமைச்சர்கள் விபரம்

புதிய அரசாங்கத்தின் புதிய அமைச்சர்கள் இன்று   ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்துகொண்டுள்ளனர்.

முதலாவதாக கலாநிதி ஹரிணி அமரசூரிய பிரதமராக  ஜனாதிபதி முன்னிலையில்  பதவியேற்றுக் கொண்டார்.

  1. பிரதமர் ஹரிணி – கல்வி, உயர்கல்வி, தொழிற்கல்வி அமைச்சராகவும் பதவியேற்றுக் கொண்டார்.
  2. விஜித ஹேரத் – வெளிநாட்டமைச்சு, வெளிநாட்டலுவல்கள் மற்றும் சுற்றுலா அமைச்சராக  பதவியேற்றுக் கொண்டார்.
  3. பேராசிரியர் சந்தன அபேரத்ன – பொதுநிர்வாகம் , மாகாண சபைகள் உள்ளூராட்சி அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்துகொண்டார்.
  4. பேராசிரியர் ஹர்ஷன நாணயக்கார – நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சராக பதவியேற்றுக் கொண்டார்.
  5. சரோஜா சாவித்ரி போல்ராஜ் – மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சராக பதவியேற்றுக் கொண்டார்.
  6. கே.டி.லால்காந்த – விவசாயம் , கால்நடை , நீர்ப்பாசனம் , காணி அமைச்சராக பதவியேற்றுக் கொண்டார்.
  7. அநுர கருணாதிலக – நகர அபிவிருத்தி, நிர்மாணிப்பு மற்றும் அமைச்சராக பதவியேற்றுக் கொண்டார்.
  8. இராமலிங்கம் சந்திரசேகர் – கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வள அமைச்சராக பதவியேற்றுக் கொண்டார்.
  9. பேராசிரியர் உபாலி பன்னிலகே – கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சராக பதவியேற்றுக் கொண்டார்.
  10. சுனில் ஹந்துன்நெத்தி – கைத்தொழில், தொழில் முயற்சியான்மை அபிவிருத்தி அமைச்சராக பதவியேற்றுக் கொண்டார்.
  11. ஆனந்த விஜேபால – பொதுமக்கள் பாதுகாப்பு ,பாராளுமன்ற விவகார அமைச்சராக பதவியேற்றுக் கொண்டார்.
  12. பிமல் நிரோஷன் ரத்நாயக்க – போக்குவரத்து , நெடுஞ்சாலைகள், துறைமுக, சிவில் விமான சேவை அமைச்சராக பதவியேற்றுக் கொண்டார்.
  13. பேராசிரியர் ஹினிதும சுனில் செனவி – புத்த சாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சராக பதவியேற்றுக் கொண்டார்.
  14. சமந்த வித்யாரத்ன – பெருந்தோட்ட ., சமூக அபிவிருத்தி அமைச்சராக பதவியேற்றுக் கொண்டார். 
  15. நளிந்த ஜெயதிஸ்ஸ – சுகாதாரம் , ஊடகம்  அமைச்சராக பதவியேற்றுக் கொண்டார்.
  16. சுனில் குமார கமகே – இளைஞர் விவகாரம் ,விளையாட்டுத்துறை  அமைச்சராக பதவியேற்றுக் கொண்டார்.
  17. வசந்த சமரசிங்க – வர்த்தக , வாணிப , உணவுப்பாதுகாப்பு , கூட்டுறவு அமைச்சராக பதவியேற்றுக் கொண்டார்.
  18. பேராசிரியர் கிரிஷாந்த அபேசேன – விஞ்ஞானம் , தொழிநுட்பம் அமைச்சராக பதவியேற்றுக் கொண்டார்.
  19. பேராசிரியர் அனில் ஜயந்த பெர்னாண்டோ – தொழில் அமைச்சராக பதவியேற்றுக் கொண்டார்.
  20. குமார ஜெயக்கொடி – வலுசக்தி அமைச்சராக பதவியேற்றுக் கொண்டார்.
  21. தம்மிக்க பட்டபெந்தி – சுற்றாடல் அமைச்சராக பதவியேற்றுக் கொண்டார்.
CATEGORIES
Share This