ரணில், ஹரின் மற்றும் மனுஷவின் வெளிநாட்டுப் பயணச் செலவுகளை வெளிப்படுத்துங்கள்

ரணில், ஹரின் மற்றும் மனுஷவின் வெளிநாட்டுப் பயணச் செலவுகளை வெளிப்படுத்துங்கள்

ஜப்பானுக்கான தமது விஜயத்தை முடித்துக்கொண்டு சில நாட்களுக்குள் தமது அண்மைய வெளிநாட்டுப் பயணங்களின் போது ஏற்பட்ட அனைத்து செலவுகளையும் வெளியிடுவேன் என தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

ஜப்பானில் நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க ;

வெளிநாட்டு பயணங்களுக்காக 700 இலட்சம் ரூபாவினை நாங்கள் செலவிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்கள்.

ஜப்பானுக்கான சுற்றுப்பயணம் முடிவடைந்த சில நாட்களுக்குள் அனைத்து செலவுகளையும் பொதுமக்களுக்கு அறிவிப்போம் என தெரிவித்துள்ளார்.

இதனிடையே, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ மற்றும் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார ஆகியோரின் வெளிநாட்டுப் பயணங்களுக்காக அரசாங்கம் மேற்கொண்ட செலவினங்களை வெளிப்படுத்துமாறும் அவர் கோரியுள்ளார்.

அத்துடன், அனைத்து விபரங்களையும் தாம் வெளியிடுவதாகவும், அதில் எந்தவொரு அரச நிதியும் உள்ளடங்கவில்லை என தாம் உத்தரவாதம் அளிப்பதாகவும் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

CATEGORIES
Share This