இறந்தவர்களை அஞ்சலிக்கும் மனிதாபிமானம் இலங்கை அரசாங்கத்திற்கு ஏற்படவில்லை

இறந்தவர்களை அஞ்சலிக்கும் மனிதாபிமானம் இலங்கை அரசாங்கத்திற்கு ஏற்படவில்லை

இறந்தவர்களை அஞ்சலிக்கும் மனிதாபிமானம் இலங்கை அரசாங்கத்திற்கு இன்னும் ஏற்படவில்லை என இலங்கைக்கான கனடிய உயர்ஸ்தானிகரிடம் அகில இலங்கை இந்துமாமன்றத்தின் தலைவர் கலாநிதி ஆறு திருமுருகன் ஆதங்கத்தை தெரிவித்தார்.

நேற்று வெள்ளிக்கிழமை நல்லை ஆதீனத்திற்கு விஜயம் செய்த இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் எரிக் வோல்ஸ்யை சாந்தித்து உரையாடிய பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிரான செயற்பாடுகள் தொடர்ந்து இலங்கையில் இடம் பெற்று வருகிறது.

இறுதி யுத்தத்தில் இறந்த தமிழ் மக்களை நினைவு கூறுவதற்கு இலங்கை அரசாங்கம் தொடர்ந்தும் தடை செய்து வருகிறது.

இறந்தவர்களை நினைவு கூறும் மனிதாபிமான செயற்பாட்டை இலங்கை அரசாங்கத்திற்கு விளங்கப்படுத்தி நினைவு கூறும் உரிமையைப் பெற்றுத் தாருங்கள்.

அது மட்டுமல்லாது தமிழ் மக்கள் எதிர்பார்க்கும் அரசியல் தீர்வு இதுவரை எட்டப்படாத நிலையில் கனேடிய அரசாங்கம் தமிழ் மக்களின் தீர்ப்பு விடையம் தொடர்பில் தலையீடு செய்ய வேண்டும்.

ஏனெனில் கனடாவில் சுமார் மூன்று இலட்சம் தமிழ் மக்கள் வாழ்ந்து வரும் நிலையில் கனேடிய அரசாங்கத்திற்கு தமிழ் மக்களின் தீர்வு விடயத்தில் தலையீடு செய்வதற்கு உரிமை உள்ளது என தெரிவித்தேன்.

இதன் போது கருத்து தெரிவித்த தூதுவர் தமிழ் மக்களின் அரசியல் தீர்வு விடயத்தில் கனடா தனது பூரன ஆதரவை வழங்கும் என தெரிவித்ததாக அவர் மேலும் தெரிவித்தார்.

CATEGORIES
Share This