முல்லைத்தீவுக்கு செல்லவுள்ள பிரதமர் – ஒட்டப்பட்ட போஸ்டர்கள் அகற்றம்
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் தேசிய மக்கள் சக்தியின் முக்கிய நிகழ்வாக, “நாட்டைக் கட்டியெழுப்பும், நாம் ஒன்றாக திசைகாட்டிக்கு” எனும் கருப்பொருளில் மாபெரும் பொதுக்கூட்டம் நாளை மாலை 4 மணிக்கு நடைபெறவுள்ளது.
இந்த கூட்டத்திற்கு சிறப்பு அதிதியாக பிரதமர் ஹரிணி அமரசூரிய கலந்து கொள்வதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
புதுக்குடியிருப்பில் உள்ள பேருந்து தரிப்பிடம் நிகழ்விற்கான முக்கிய இடமாகத் தேர்வு செய்யப்பட்டு நிகழ்வை விளம்பரப்படுத்தும் பதாகைகள் மற்றும் போஸ்டர்கள் பரவலாக ஒட்டப்பட்டு காணப்படுவதோடு குறித்த பகுதியினை புதுக்குடியிருப்பு பிரதேச சபையினர் ஜே.சி.பி வாகனம் மூலம் துப்பரவு செய்யும் பணி தற்போது நடைபெற்றன.
இந்நிலையில், தேசியமக்கள் சக்தியின் பொதுக்கூட்ட நிகழ்வை விளம்பரப்படுத்தும் முகமாக பதாகைகள் மற்றும் போஸ்டர்கள் தேர்தல் விதிமுறையினை மீறி காணப்படுவதாக ட்ரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் ஸ்ரீலங்காவினுடைய (Tisl) தேர்தல் கண்காணிப்பாளர்களால் முல்லைத்தீவு மாவட்ட தேர்தல் திணைக்களத்தினருக்கு தகவல் வழங்கப்பட்டதனை தொடர்ந்து குறித்த இடத்திலிருந்து பதாதைகளை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.
புதுக்குடியிருப்பு பேருந்து நிலையத்தில் நிகழ்வை விளம்பரப்படுத்தும் பதாகைகள் மற்றும் போஸ்டர்கள் பரவலாக ஒட்டப்பட்டு இருந்ததனையடுத்து குறித்த விடயம் தொடர்பில் ட்ரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் ஸ்ரீலங்காவினுடைய (Tisl) தேர்தல் கண்காணிப்பாளர்களால் முல்லைத்தீவு மாவட்ட தேர்தல் திணைக்களத்தினருக்கு தகவல் வழங்கப்பட்டதனை தொடர்ந்து நேரடியாக வந்த அதிகாரிகள் மற்றும் பொலிஸார் குறித்த பதாகைகளை உடனடியாக அகற்றியிருந்தார்கள்.