பலாலி உயர் பாதுகாப்பு வலயத்தில் ஆளுநர் கலந்துரையாடல்; விடுவிக்கப்படவிருக்கும் காணிகள்-வீதிகள் தொடர்பில் ஆராய்வு

பலாலி உயர் பாதுகாப்பு வலயத்தில் ஆளுநர் கலந்துரையாடல்; விடுவிக்கப்படவிருக்கும் காணிகள்-வீதிகள் தொடர்பில் ஆராய்வு

பலாலி உயர் பாதுகாப்பு வலயத்தில் அமைந்துள்ள யாழ். மாவட்ட இராணுவ தலைமையகத்தில் வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன், யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் சந்தன விக்கிரமசிங்க மற்றும் இராணுவ உயர் அதிகாரிகளுடனான கலந்துரையாடல் நேற்று சனிக்கிழமை இடம்பெற்றது.

இக் கலந்துரையாடலில் பலாலி உயர் பாதுகாப்பு வலயம் தொடர்பாகவும், உயர் பாதுகாப்பு வலயத்தில் இருந்து விடுவிக்கப்படுகின்ற வீதி, காணிகள் மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பாகவும் பல்வேறுபட்ட விடயங்கள் கலந்து ஆலோசிக்கப்பட்டது.

அத்துடன் பொதுமக்களுக்கு இராணுவத்தால் வழங்கப்படும் உதவிகள் மற்றும் சேவைகள் தொடர்பான விடைகள் விரிவாக இராணுவ உயர் அதிகாரிகள் தெரிவித்தனர். பலாலி உயர் பாதுகாப்பு வலயத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் இறுதியில் ஆளுநர், மரக்கன்று நடுகை மேற்கொள்ளபட்டது. பின்னர் விடுவிக்கப்பட்ட பலாலி – அச்சுவேலி பிரதான வீதியை வடமாகாண ஆளுநர் நேரில் சென்று பார்வையிட்டார்.

CATEGORIES
Share This