இந்தியாவில் புதிய மாற்றங்களுடன் நீதி தேவதை சிலை
ஆங்கிலேயர் ஆட்சியின்போது உயர் நீதிமன்றத்தில் கறுப்பு துணியால் கண்கள் கட்டப்பட்ட நிலையில், இடது கையில் தராசு, வலது கையில் வாளும் இருக்கும்படி நீதி தேவதை சிலை நிறுவப்பட்டிருந்தது.
பாகுபாடு பார்க்காமல் தீர்ப்பு வழங்க வேண்டும் என்பதற்காகவும் அநீதியை வீழ்த்துவதற்கு வாள் இடம்பெற வேண்டும் என்பதைக் குறிக்கும் வகையிலும் இந்த சிலை வடிவமைக்கப்பட்டிருந்தது.
பல வருடங்களுக்குப் பின்னர் நீதி தேவதை சிலையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு உயர் நீதிமன்றத்தில் உள்ள நூலகத்தில் வைக்கப்பட்டுள்ளது.
புதிதாக வடிவமைக்கப்பட்டுள்ள சிலையின் கண்களில் கறுப்பு துணி இல்லை, வலது கையில் அரசியல் சாசனப் புத்தகம், தலையில் கிரீடம், நெற்றியில் திலகம் என வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த சிலையின் வடிவம், சட்டம் ஒருபோதும் குருடாகாது. அது அனைவரையும் சமமாக பார்க்கிறது. இந்தியாவின் சட்டங்களின்படியே நீதி வழங்கப்படுகிறது என்பதைக் குறிக்கும் வகையில் நீதி தேவதையின் வலது கையில் அரசியலமைப்பு புத்தகம் இடம்பெற்றுள்ளது எனக் கூறப்பட்டுள்ளது.
இப் புதிய சிலையை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி டி.வை.சந்திர சூட் திறந்து வைத்துள்ளார்.