மயிலத்தமடு மாதவனை பண்ணையாளருக்கு நீதி கோரிய ஆர்ப்பாட்ட வழக்கு ஒத்திவைப்பு; ஆஜராகாதோருக்கு பிடியாணை

மயிலத்தமடு மாதவனை பண்ணையாளருக்கு நீதி கோரிய ஆர்ப்பாட்ட வழக்கு ஒத்திவைப்பு; ஆஜராகாதோருக்கு பிடியாணை

மட்டக்களப்பு – மயிலத்தமடு மாதவனை பண்ணையாளர்களின் பிரச்சினை தொடர்பான நீதி கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக ஊடகவியலாளர்கள் இருவர் உட்பட 30பேருக்கு எதிரான வழக்கு மீண்டும் ஒத்திவைப்பட்டுள்ளது.

கடந்த 2023 ஒக்டோபர் 8ஆம் திகதி மட்டக்களப்பு – செங்கலடி பகுதிக்கு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வருகையின் போது கொம்மாதுறை பகுதியில் – மயிலத்தமடு மாதவனை மேய்ச்சல் தரை பிரச்சினைக்கு தீர்வு கோரி வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

இதற்கு எதிராக ஏறாவூர் பொலிஸாரினால் வீதியை மறித்து போக்குவரத்துக்கு தடையேற்படுத்தியதாக இரண்டு ஊடகவியலாளர்கள்,முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள், பண்ணையாளர்கள் , சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், காணாமல் ஆக்கப்பட்டோர் சங்க உறுப்பினர்கள் உள்ளிட்ட 30பேருக்க எதிராக ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இது தொடர்பான வழக்கு ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றில் நேற்று புதன்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இந்த வழக்கு தொடர்பில் இரண்டு சந்தேகநபர்கள் விசாரணைக்கு ஆஜராகாத நிலையில் வழக்கு விசாரணைகள் ஒத்திவைக்கப்பட்டதுடன் வழக்கில் கலந்துகொள்ளாதவர்களுக்கு பிடியாணையும் பிறபிக்கப்பட்டது.

CATEGORIES
Share This