தையிட்டி திஸ்ஸ விகாரைக்கு எதிராகப் போராட்டம்

தையிட்டி திஸ்ஸ விகாரைக்கு எதிராகப் போராட்டம்

யாழ். தையிட்டியில் உள்ள சட்டவிரோத திஸ்ஸ விகாரைக்கு எதிராக தொடர் போராட்டம் நேற்று முன்னெடுக்கப்பட்டது.

இந்தப் போராட்டமானது நேற்று மீண்டும் ஆரம்பமாகி இன்று வரை நடைபெறும்.

சட்டவிரோத முறையில் அமைக்கப்பட்டுள்ள தையிட்டி திஸ்ஸ விகாரையை அகற்றுமாறு கோரி தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர், மக்களுடன் இணைந்து தொடர்ச்சியாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த போராட்டமானது, ஒவ்வொரு பௌர்ணமி தினத்திலும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

CATEGORIES
Share This