வரலாற்றில் முதல் முறையாக; ஐ.தே.க தலைவர்கள் தேர்தலில் போட்டியிடவில்லை

வரலாற்றில் முதல் முறையாக; ஐ.தே.க தலைவர்கள் தேர்தலில் போட்டியிடவில்லை

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னணித் தலைவர்கள் எவரும் தேர்தலில் போட்டியிடாதது விசேட அம்சமாக அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதன்படி, கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, பிரதித் தலைவர் அகிலவிராஜ் காரியவசம், தவிசாளர் வஜிர அபேவர்தன, பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார ஆகியோர் இம்முறை போட்டியிடவில்லை.

எனினும், நிர்வாகச் செயலாளர் ரவி கருணாநாயக்க தேசியப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

டி.எஸ். சேனாநாயக்க ஐக்கிய தேசியக் கட்சியை உருவாக்கியதன் பின்னர், கட்சித் தலைவர், உப தலைவர், தவிசாளர் மற்றும் பொதுச் செயலாளர் ஆகிய நான்கு பேரும் பொதுத் தேர்தலில் போட்டியிடாதது வரலாற்றில் முதல் தடவையாகும்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க கடந்த ஜனாதிபதித் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக எரிவாயு சிலிண்டர் சின்னத்தில் போட்டியிட்டிருந்தார்.

இதேவேளை, முன்னாள் ஜனாதிபதியும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க இன்று (17) விசேட அறிக்கையொன்றை வெளியிடவுள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் ரணில் விக்கிரமசிங்க அறிக்கை ஒன்றை வெளியிடுவது இதுவே முதல் தடவையாகும்.

ரணில் விக்கிரமசிங்க இந்த விசேட அறிக்கையின் மூலம் நாட்டின் அரசியல் நடத்தை மற்றும் எதிர்காலத் திட்டங்களை வெளிப்படுத்துவார் என தெரிவிக்கப்படுகின்றது.

CATEGORIES
Share This