உக்ரைன் மீதான படையெடுப்பு; ரஷ்யா 671,400 துருப்புக்களை இழந்துவிட்டது

உக்ரைன் மீதான படையெடுப்பு; ரஷ்யா 671,400 துருப்புக்களை இழந்துவிட்டது

உக்ரைன் மீதான படையெடுப்பை தொடங்கியது முதல் இதுரையில் ரஷ்யா 671,400 துருப்புக்களை இழந்துள்ளது என்று உக்ரைனின் ஆயுதப்படைகளின் பொதுப் பணியாளர்கள் அறிவித்துள்ளனர்.

கடந்த 2022ஆம் ஆண்டு பெப்ரவரி 24ஆம் திகதி உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்திருந்தது.

இந்நிலையில், ரஷ்யா அதன் லட்சக்கணக்காண துருப்புகளையும், ஆயுதங்களையும் இழந்துள்ளதாக க்ரைனின் ஆயுதப்படைகளின் பொதுப் பணியாளர்கள் அறிக்கை ஒன்றில் நேற்று (15) தெரிவித்துள்ளனர்.

அந்த அறிக்கையின்படி, 8,988 தொட்டிகள், 17,939 கவச வாகனங்கள், 26,654 எரிபொருள் தொட்டிகள், 19,430 பீரங்கி அமைப்புகள், 1,231 ஏவுதள ராக்கெட் அமைப்புகள், 978 விமான பாதுகாப்பு அமைப்புகள், 369 விமானங்கள், 329 ஹெலிகோப்டர்கள், 17,019 டப்னெஸ் மற்றும் ட்ரோன்களை ரஷ்யா இழந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ரஷ்யாவுக்கு சொந்தமான 28 கப்பல்கள் மற்றும் படகுகளும், ஒரு நீர்மூழ்கிக் கப்பலும் உக்ரைனின் தாக்குதலில் அழிக்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

CATEGORIES
Share This