“ட்ரம்ப் ஜனநாயத்துக்கு அச்சுறுத்தலானவர்”: பென்சில்வேனியா கூட்டத்தில் கமலா ஹாரிஸ்

“ட்ரம்ப் ஜனநாயத்துக்கு அச்சுறுத்தலானவர்”: பென்சில்வேனியா கூட்டத்தில் கமலா ஹாரிஸ்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் நவம்பர் 5ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில், ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் கமலா ஹாரிஸ், குடியரசுக் கட்சியின் வேட்பாளரான டொனால்ட் ட்ரம்ப்பை ஜனநாயகத்துக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக குற்றம் சாட்டியுள்ளார்.

பென்சில்வேனியாவில் நடைபெற்ற கூட்டத்திலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ஹாரிஸ் மற்றும் ட்ரம்ப் இருவரும் கடந்த திங்கட்கிழமை மாலை தங்கள் ஆதரவாளர்கள் மத்தியில் உரையாற்றினர்.

ஹாரிஸ் எரி நகரத்தில் உரையாற்ற, ட்ரம்ப் ஓக்ஸிலுள்ள டவுன் ஹோலில் கூட்டம் நடத்தினார்.

ட்ரம்பின் இரண்டாவது பதவிக்காலம் அமெரிக்காவுக்கு மிகப்பெரிய ஆபத்தை ஏற்படுத்தும்.

ட்ரம்ப் நிலையற்றவராகவும் கட்டுப்பாடற்றவராகவும் இருக்கிறாரென கமலா ஹாிஸ் ஆதரவாளர்களிடம் சுட்டிக்காட்டினா்.

மேலும் அவர் தெரிவிக்கையில்,

முன்னாள் ஜனாதிபதி புலம்பெயர்ந்தோர் குறித்து மனித நேயமற்ற சொல்லாட்சிகளை கடைபிடித்தார்.

பல வருடங்களாகவே ட்ரம்ப் அமெரிக்க ஜனநாயகத்துக்கு அச்சுறுத்தலானவர் என ஜனநாயகக் கட்சி நிரூபிக்க முயற்சித்தது.

அதற்கு உதாரணமாக, 2020ஆம் ஆண்டுக்கான தேர்தல் முடிவுகளை காங்கிரஸ் கூறுவதை தடுக்கும் முகமாக 2021 ஜனவரி 6ஆம் திகதி ட்ரம்பின் ஆதரவாளர்கள் சிலர் அமெரிக்க தலைநகரைத் தாக்கினர்.

அதேவேளை சமீபத்திய கருத்துக் கணிப்பில் ட்ரம்ப் மற்றும் ஹாரிஸ்க்கு இடையில் மிகவும் நெருக்கமான ஒரு போட்டி நிலவி வருகின்றமை தெரிய வருகின்றது.

சமீபத்திய வாரங்களில் ஹாரிஸூக்கு கறுப்பின ஆண்கள் மற்றும் அரேபிய, அமெரிக்க முஸ்லிம்களிடையே ஆதரவு குறைந்துள்ளமையால் அவர்களிடையே ஆதரவைப் பெற்றுக்கொள்வதற்கு பிரச்சாரத்தில் கமலா ஹாிஸ் ஈடுபட்டுள்ளார்.

கடந்த திங்களன்று ட்ரம்பின் சமீபத்திய கருத்துக்களை சுட்டிக்காட்டி அவரை மற்றொரு பதவிக்கு தேர்ந்தெடுப்பதற்கு எதிராக எச்சரிக்கை விடுத்தார் ஹாரிஸ்.

மேலும் ட்ரம்ப் அவருக்கு ஆதரவளிக்காதவர்களையும் அவருக்கு வளைந்து கொடுக்காதவர்களையும் நாட்டின் எதிரியாக கருதுகிறார் எனவும் கூறினார்.

வரவிருக்கும் தேர்தலில் முக்கியமான வடகிழக்கு மாநிலமான பென்சில்வேனியாவில் ஹாரிஸ் ஒரு சதவீதத்துக்கும் குறைவான முன்னிலையில் இருப்பதாக கணிப்பீடுகள் காண்பிக்கின்றன.

ட்ரம்ப் அவரது பங்கிற்கு பென்சில்வேனியா நகரமான ஓக்ஸில் நடந்த கூட்டத்தில், அமெரிக்க எண்ணெய் தோண்டுதலை அதிகரிப்பதற்கான உறுதிமொழியை மீண்டும் மீண்டும் கூறினார்.

CATEGORIES
Share This