நோபல் பரிசு பெற்ற யூனுஸுக்கு 6 மாதம் சிறை!
வங்கதேசத்தை சேர்ந்த முகமது யூனுஸ், ‘கிராமீன் கம்யூனிகேஷன்ஸ்’ என்ற வங்கியை தொடங்கி, லட்சக்கணக்கான கிராமப்புற தொழில் முனைவோருக்கு கடன்களை வழங்கினார். அவரது பொருளாதார சிந்தனைக்காக கடந்த 2006ஆம் ஆண்டில்அவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது.
கடந்த 2007இல் முகமது யூனுஸ் அரசியலில் கால் பதித்தார். இதனால் கடந்த 2011ஆம் ஆண்டில் கிராமீன் கம்யூனிகேஷன்ஸ் வங்கியின் தலைவர் பதவியில் இருந்து அவர் நீக்கப்பட்டார்.
இதைத் தொடர்ந்து தொழிலாளர் சட்ட விதிமீறல் தொடர்பாகஅவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த தொழிலாளர் நீதிமன்றம்யூனுஸுக்கு 6 மாதம் சிறை சிறைதண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியது. அவர் தரப்பில் ஜாமீன் கோரப்பட்டது. இதை பரிசீலித்த நீதிமன்றம் அவருக்கு ஒரு மாதம் ஜாமீன் வழங்கியது. தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்படும் என்று யூனுஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.