சூழல் மாசடைதல் டில்லியில் அதிகரிப்பு; பட்டாசு வெடிக்க தடை உத்தரவு

சூழல் மாசடைதல் டில்லியில் அதிகரிப்பு; பட்டாசு வெடிக்க தடை உத்தரவு

டில்லி நகர சூழல் அதிகமாக மாசடைவதற்குப் பட்டாசுகள் வெடிப்பதே காரணம் என கருதப்படுகிறது.

பட்டாசு வெடித்தல் தொடர்பான வழக்குகளின் அடிப்படையில் 2018 ஆம் ஆண்டு டில்லியில் பட்டாசு வெடிக்க உயர் நீதிமன்றம் தடை விதித்திருந்தது.

ஆனால், பேரியம் உப்பு இல்லாத பசுமை பட்டாசுகளை வெடிக்கலாம் என அனுமதியளித்திருந்தது.

இருப்பினும் பசுமை பட்டாசுகளை வேறுபடுத்துவதில் ஏற்பட்ட சிக்கல்கள் காரணமாக முழுமையான எந்தவொரு பட்டாசும் வெடிக்கக்கூடாது என 2020 ஆம் ஆண்டிலிருந்தே டில்லி மாநில அரசு தடை விதித்து வருகிறது.

அதன்படி, குளிர்காலத்தை முன்னிட்டு கடந்த மாதம் 9ஆம் திகதி பட்டாசுக்கு தடை விதிக்கப்பட்டது.

இந்த தடை உத்தரவை நேற்று முன்தினம் திங்கட்கிழமை டில்லி சூழல் மாசு கட்டுப்பாட்டுக்குழுவும் பிறப்பித்தது.

பட்டாசு உற்பத்தி, இருப்பு வைத்தல், விற்பனை செய்தல், வாங்குதல், வெடித்தல் போன்ற எந்த ஒரு செயல்பாட்டையும் செய்ய முடியாது.

இந்த உத்தரவு எவ்வாறு செயல்படுத்தப்படுகிறது என்பதனை டில்லி பொலிஸார் தினந்தோறும் அறிக்கையாக சமர்ப்பிக்க வேண்டும் எனவும் மாசு கட்டுப்பாட்டுக்குழு அறிவித்துள்ளது.

CATEGORIES
Share This