இலங்கையில் சீனக் கப்பல்; கழுகுப் பார்வையில் இந்தியா

இலங்கையில் சீனக் கப்பல்; கழுகுப் பார்வையில் இந்தியா

இந்திய வெளிவிவகார அமைச்சர் வந்துச் சென்ற பின்னணியில் இலங்கையின் புதிய அரசாங்கம் சீன கடற்படைக் கப்பல் கப்பல் கொழும்பு துறைமுகத்திற்குள் நுழைய அனுமதி வழங்கியுள்ளது.

வெளிநாட்டு ஆராய்ச்சிக் கப்பல்களுக்கு தடை விதித்துள்ள பின்னணியில் இலங்கை அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது. இலங்கை அரசின் இந்த நடவடிக்கை கொழும்பு மீதான இந்தியாவின் பார்வையை தீவிரப்படுத்தியுள்ளது.

எவ்வாறாயினும், இது ஆராய்ச்சிக் இல்லையெனவும், பயிற்சிக் கப்பல் என்பதால் அனுமதி வழங்கப்பட்டதாகக் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

“ஆராய்ச்சி கப்பல்கள் தொடர்பான கொள்கையில் எந்த மாற்றமும் இல்லை” என்றும் வெளியுறவு அமைச்சர் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

சீன (China) மக்கள் விடுதலை இராணுவ கடற்படையின் பாய்மரப் பயிற்சிப் போர்க்கப்பலான ‘போ லாங்’ கடந்த எட்டாம் (ஒக்டோபர் 8) திகதி கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

130 பணியாளர்களுடன் சீனக் கப்பல் வெள்ளிக்கிழமை (ஒக்டோபர் 11) வரை நிறுத்தி வைக்கப்படும் என இலங்கை கடற்படை முன்னதாக அறிவித்திருந்தது.

இந்தக் குழுவினர் “நாட்டின் சுற்றுலா தலங்களுக்கு” விஜயம் செய்வார்கள் எனவும் இலங்கை கடற்படையினர் இயக்கம் குறித்த விளக்கக்காட்சிகளில் பங்கேற்பார்கள் எனவும் தெரிவித்துள்ளது.

இலங்கை மற்றும் மாலைத்தீவுகளில் பெய்ஜிங்கின் செல்வாக்கு அதிகரித்துவரும் அதிகரித்து வரும் நிலையில், சீனக் கப்பல்களின் இத்தகைய வருகைகளை இந்தியா உன்னிப்பாக அவதானித்து வருகின்றது.

இந்தியாவின் ஆட்சேபனையைத் தொடர்ந்து, கடந்த ஆண்டு சீனாவின் சியாங் யாங் ஹாங் 3 ஆய்வுக் கப்பலுக்கு இலங்கை அரசாங்கம் தனது கடல் எல்லைக்குள் நுழைய அனுமதி மறுத்திருந்தது.

இந்நிலையில், செவ்வாயன்று ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட வெளிவிவகார அமைச்சர் ஹேரத், எந்தவொரு நாட்டிற்கும் முன்னுரிமை அளிக்கப்படாத சமநிலை அணுகுமுறையை தமது அரசாங்கம் பின்பற்றும் என்று தெரிவித்தார்.

நாங்கள் இந்தியாவுடன் உறவை பேணுவது போல் சீனாவுடனும் உறவைப் பேணுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சீன இராணுவப் பயிற்சிக் கப்பல் இலங்கைக்கு விஜயம் செய்ததையும் அவர் உறுதிப்படுத்தினார், இது வழக்கமான இராஜதந்திர ஈடுபாடுகளின் ஒரு பகுதியாகும்.

“கப்பல் இந்த மாதம் கொழும்பு துறைமுகத்தை வந்தடைய திட்டமிடப்பட்டுள்ளது,” என்று அவர் செவ்வாய்க்கிழமை குறிப்பிட்டிருந்தார்.

இதேவேளை, இந்திய வெளிவிகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் கடந்த நான்காம் திகதி இலங்கைக்கு ஒருநாள் பயணமாக வந்திருந்ததுடன், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க உள்ளிட்டவர்களை சந்தித்துப் பேசியிருந்தார்.

இதன்போது கருத்து வெளியிட்டிருந்த ஜனாதிபதி, இந்தியாவின் தேசியப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் எந்த நடவடிக்கைகளையும் தமது அரசாங்கம் மேற்கொள்ளாது என உறுதியளித்திருந்தர்.

மேலும், தனது தலைமையின் கீழ், நாடு புவிசார் அரசியல் போட்டிகளுக்குள் இழுக்கப்படுவதைத் தவிர்க்கும் என்றும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க சஞ்சிகை ஒன்றுக்கு அண்மையில் வழங்கிய செவ்வியில் குறிப்பிட்டிருந்தார்.

CATEGORIES
Share This