ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்; மொத்தம் 311,000,000 ரூபாய் இழப்பீடு கிடைக்கப்பெற்றுள்ளது

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்; மொத்தம் 311,000,000 ரூபாய் இழப்பீடு கிடைக்கப்பெற்றுள்ளது

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு 2023ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 12ஆம் திகதி உயர்நீதிமன்ற வழங்கிய தீர்ப்பின்படி மொத்தம் 311,000,000 ரூபாய் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது.

இழப்பீட்டுக்கான அலுவலகத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீட்டு நிதி வழங்கப்பட்டுள்ளது.

இழப்பீடுகளுக்கான அலுவலகம் பாதிக்கப்பட்டவர்களின் தேவைகளை அடிப்படையாகக் கொண்ட மதிப்பீடுகளின் பிரகாரம் இந்த நிதியை வழங்கி வருகிறது.

மொத்த தொகையான 311,000,000 ரூபாயில் 62,345,502 ரூபாய் இதுவரை வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிதி சத்திரசிகிச்சைச் செலவுகள், குழந்தைகளின் கல்வி, நிரந்தர ஊனமுற்றோர் மற்றும் ஏனைய தேவைகளுக்குச் செலவிடப்பட்டுள்ளது.

ஈஸ்டர் தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை உறுதி செய்வதற்காக 2024ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 18ஆம் திகதியன்று இழப்பீடு விநியோகத்தை உயர்நீதிமன்றம் மீள்ஆய்வு செய்யும்.

இந்நிலையில், அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பிரதானி நிலந்த ஜயவர்தனவும் தனக்கு விதிக்கப்பட்டிருந்த தொகையை செலுத்தி நிறைவு செய்திருந்தார்.

மேலும் , இந்த வழக்கில் பிரதிவாதிகளுக்கு இழப்பீடாக வழங்க உத்தரவிடப்பட்ட பெருந்தொகை நிதி எங்கிருந்து கிடைத்தது என்பது குறித்து தற்போது பல கேள்விகள் எழுந்துள்ளன.

CATEGORIES
Share This