உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களை இன்று சந்திக்கின்றார் கர்தினால்

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களை இன்று சந்திக்கின்றார் கர்தினால்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களால் பாதிக்கப்பட்டவர்களை கர்தினால் மல்கம் ரஞ்சித் இன்று சந்தித்து உரையாடவுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் கத்துவாப்பிட்டிய தேவாலயத்தில் இன்று கர்தினால் சந்தித்து உரையாடவுள்ளார் .

புதிய அரசாங்கத்தின் நீதிதொடர்பாக இடம்பெறும் நடவடிக்கைகள் குறித்து பாதிக்கப்பட்டவர்களுடன் கலந்துரையாடவுள்ள கர்தினால் அரசாங்கத்தை சேர்ந்தவர்களுடன் சமீபத்தில் மேற்கொண்ட பேச்சுவார்த்தைகள் குறித்து பாதிக்கப்பட்டவர்களிற்கு தெளிவுபடுத்தவுள்ளார்.

கர்தினால் உயிர்த்த ஞாயிறுதாக்குதல் காரணமாக பாதிக்கப்பட்டவர்களை இன்று சந்திக்கவுள்ளதை உறுதி செய்துள்ள உயிர்த்த ஞாயிறு தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களின் கூட்டமைப்பின் தலைவர் நிசாந்த மொகாந்திரம் தெரிவித்துள்ளார்.

முன்னைய அரசாங்கம் நியமித்த ஆணைக்குழுக்கள் குறித்து எங்களிற்கு நம்பிக்கையில்லை, என தெரிவித்துள்ள அவர் எங்களிற்கு இன்னுமொரு குழு தேவையில்லை,புதிய அரசாங்கத்திடமிருந்து வலுவான நடவடிக்கைகளை எதிர்பார்க்கின்றோம் என தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் இன்னமும் தீர்க்கப்படாமல் உள்ள பிரச்சினைகள் குறித்து அரசாங்கத்துடன் தான் மேற்கொண்ட பேச்சுவார்த்தைகளின் விபரங்களை கர்தினால் இன்றைய சந்திப்பில் பொதுமக்களுடன் பகிர்ந்துகொள்வார் என நிசாந்த மொகாந்திரம் தெரிவித்துள்ளார்.

இன்றைய சந்திப்பில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரும் கலந்துகொள்ளக்கூடும் என செய்திகள் வெளியாகியுள்ளன.

CATEGORIES
Share This