அநுரவின் பதவியில் முதல் 10 நாள் செயற்பாடுகள்: தொடரும் மாற்றங்கள்
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் முதல் 10 நாள் செயற்பாடுகள்:
01.டொலரின் பெறுமதி 300 ரூபாய்க்கு கீழே காணப்படுகிறது.
02.பங்குச் சந்தை வீழ்ச்சியடையாமல் வரலாற்றில் மிக விரைவான வளர்ச்சியைக் காட்டுகிறது.
03.வரலாற்றில் மிக அமைதியான தேர்தல் நடைபெற்றது.
- சர்வதேச அளவில் நாடு ஓரங்கட்டப்படாமல் அனைத்து பலம் பொருந்திய நாடுகளின் தலைவர்களும் ஆதரவு தெரிவித்து வருகின்றமை.
- சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கி ஆதரவு தெரிவிப்பதாக உறுதியளித்தமை.
- ஆடம்பரமற்ற முறையில் சத்தியப் பிரமான நிகழ்வை நடாத்தி, பல இலட்சங்கள் சேமிக்கப்பட்டமை.
- பேராசிரியர் பட்டம் பெற்ற பெண்ணை பிரதமராக நியமித்ததன் மூலம் பெண்கள் அரசியல் மேலும் ஊக்குவிக்கப்பட்டது.
- ஜனாதிபதி மற்றும் பிரதமர் பாதுகாப்புப் படைகளில் மேலதிகமாக இருந்த பாதுகாப்பு அதிகாரிகளையும் மற்றும் முக்கியஸ்தர்களுக்கு என அளிக்கபட்டிருந்த அவசியமற்ற பாதுகாப்பு அதிகாரிகளையும் நீக்கி சாதாரண கடமைகளில் ஈடுபடுத்தியமை.
- அனைத்து அரச வாகனங்களையும் மீள பெற்றுக் கொண்டமை.
- காணாமல் போன அரச வாகனங்கள் குறித்து ஆய்வு நடாத்தி விசாரணை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளமை.
- முட்டை வர்த்தக ஏகபோகம் தடுக்கபட்டதன் மூலம் முட்டை விலை குறைந்தமை.
- பிரதமரின் உத்தரவின் பேரில் பாடசாலைகள் அரசியல் மயமாவது தடுக்கப்பட்டமை.
- அரசியல் தொடர்புகள் இல்லாத, சம்பந்தப்பட்ட துறையில் அனுபவமும் கல்வித் தகுதியும் கொண்ட அதிகாரிகளை அமைச்சுச் செயலாளர்கள் மற்றும் நிறுவனங்களின் தலைவர்களாகவும் நியமித்தமை.
- ஹெக்டயார் ஒன்றுக்கு வழங்கப்படும் விவசாயிகளின் உதவித் தொகை அதிகரிக்கப்பட்டமை.
- அரசாங்கத்தின் அனுசரணையில் இடைநிலை நிறுவனங்களின் தலையீடு இல்லாமல் இலங்கையில் விசா வழங்கும் செயல்முறையை மேற்கொண்டமை.
- ஜனாதிபதி பதவியேற்று மிகக் குறைந்த காலத்தில் அதிகமான ஊழல்வாதிகள் மீது வழக்குத் தொடரப்படவுள்ளமை.
- அமைச்சர்களின் உத்தியோகபூர்வ இல்லங்கள் மற்றும் பங்களாக்களை மிகக் குறுகிய காலத்திற்குள் உடனடியாக மீட்பதற்கான உத்தரவுகளை வழங்கப்பட்டுள்ளமை.
- மீனவ சமூகத்திற்கு எரிபொருள் மானியம் வழங்கப்பட்டமை.
- பதில் பொலிஸ் மா அதிபராக சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரியவை நியமித்தமை.
- கோட்டை ஜனாதிபதி மாவத்தை மற்றும் பரோன் ஜயதிலக மாவத்தையை மக்கள் பாவனைக்காக திறந்துவிடப்பட்டமை.
- ஜப்பானிய அரசாங்கத்தின் உதவியுடன் இந்நாட்டில் தற்போது வேலை பாதியில் நிறுத்தப்பட்டுள்ள 11 திட்டங்களின் கட்டுமானப் பணிகளை உடனடியாகத் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளமை .
- கலால் வரி மோசடி செய்திருந்த பல நிறுவனங்களின் உரிமம் இரத்து செய்ய முடிவெடுக்கப்பட்டமை.
- எரிபொருள் விலையை படிப்படியாக குறைக்க ஏற்கனவே நடவடிக்கை எடுக்கப்பட்டமை.
- ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விற்பனை செய்யப்படாது என அறிவித்தமை.
- வரலாற்றில் முதல் தடவையாக ஜனாதிபதியின் ஆலோசகர்கள் சம்பளம் அல்லது கொடுப்பனவுகள் எதுவுமின்றி கௌரவ சேவையாக பணியாற்ற முன்வந்துள்ளமை.
- ஜனாதிபதியின் ஒரு பயணத்திற்கு அநாவசியமாக இரண்டு அல்லது மூன்று ஹெலிகாப்டர்களைப் பயன்படுத்தி முப்பது லட்சங்களுக்கு மேல் செலவழித்து இந்த நாட்டின் அபரிமிதமான விரயம் நிறுத்தப்பட்டமை.
பல முற்போக்கான மாற்றங்கள் ஏற்கனவே செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தகக்து.
CATEGORIES செய்திகள்