பெய்ரூட் விமான நிலையத்திற்கு அருகில் இஸ்ரேல் தாக்குதல்; நஸ்ரல்லாவின் வாரிசை குறிவைத்ததாக தகவல்

பெய்ரூட் விமான நிலையத்திற்கு அருகில் இஸ்ரேல் தாக்குதல்; நஸ்ரல்லாவின் வாரிசை குறிவைத்ததாக தகவல்

லெபனானின் பெய்ரூட்டில் இன்று காலை முதல் இஸ்ரேல் புதிய தாக்குதல்களை நடத்தியுள்ளது.

விமானம் ஒன்று தரையிறங்கிய உடனேயே நகரின் சர்வதேச விமான நிலையத்திற்கு வெளியே பெரிய வெடிப்புகள் பதிவாகியதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

ஹிஸ்பொல்லாவின் மூத்த அதிகாரி ஹஷேம் சஃபிதீனை குறிவைத்து இன்று அதிகாலை இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொல்லப்பட்ட ஹிஸ்பொல்லா அமைப்பின் தலைவர் ஹசன் நஸ்ரல்லாவின் வாரிசாக சஃபிதீன் அடையாளப்படுத்தப்பட்டுள்ளார்.

Flightradar 24 இணையதளத்தின் தரவுகள் தரையிறங்கிய விமானம் துபாயில் இருந்து வந்த மிடில் ஈஸ்ட் ஏர்லைன்ஸ் ME429 என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, ஹெஸ்பொல்லாவுக்கு எதிரான தாக்குதல்களை முன்னெடுத்து வரும் இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் (IDF) தெற்கில் உள்ள மேலும் 20 நகரங்கள் மற்றும் கிராமங்களை விட்டு வெளியேற உத்தரவிட்டுள்ளது.

இதில் பிராந்திய தலைநகரான நபாடியும் அடங்கும் எனவும் அங்கு மக்கள் தங்கள் சொந்த பாதுகாப்பிற்காக உடனடியாக வெளியேறுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், மத்திய கிழக்கில் “முழுமையான போர்” இருக்கும் என்று நம்பவில்லை என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

ஒரு முழுமையான போர் இருக்கும் என்று நான் நம்பவில்லை. அதைத் தவிர்க்கலாம் என்று நினைப்பதாகவும்” ஜோ பைடன் மேலும் தெரிவித்துள்ளார்.

CATEGORIES
Share This