அரசியல் கூட்டத்திற்கு 18 வயது மகனை அறிமுகப்படுத்திய டிரம்ப்

அரசியல் கூட்டத்திற்கு 18 வயது மகனை அறிமுகப்படுத்திய டிரம்ப்

அமெரிக்காவில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பரபரப்பான அரசியல் சூழல் நிலவுகிறது.

இந்த நிலையில், முன்னாள் ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் (Donald Trump) தனது மகனின் கல்வி குறித்து பேசியுள்ளார்.

டிரம்பின் இளைய மகன் பரோன் (Barron) தனது பாடசாலை படிப்பை முடித்துள்ளார். இதனைத் தொடர்ந்து நியூயார்க் பல்கலைக்கழகம், ஜோர்ஜ்டவுன் பல்கலைக்கழகம் மற்றும் பென்சில்வேனியா பல்கலைக்கழகம் ஆகியவற்றை பரோன் தனது தேர்வாக வைத்திருந்ததாக செய்தி பரவியது.

மியாமியில் நடந்த ஒரு பேரணிக்கு பரோன் தனது தந்தையுடன் சென்றார். அங்கு கூட்டத்திற்கு பரோனை அறிமுகப்படுத்திய டிரம்ப், ”இவர் ஒரு இளைஞன், அவருக்கு இப்போது தான் 18 வயது. இப்போது கல்லூரிக்கு செல்லும் இளைஞர்.

அவர் விரும்பிய ஒவ்வொரு கல்லூரியிலும் நுழைந்தார் மற்றும் அவர் தனது விருப்பத்தை தெரிவு செய்தார். அவர் மிகவும் நல்ல சிறுவன். அவர் ஒரு சிறப்பான நபரும் கூட. அவர் இதை செய்வது இதுவே முதல் முறை.

பரோன் ஒரு சிறந்த மாணவர். அவருக்கு அரசியல் பிடிக்கும். இது ஒருவித வேடிக்கையானது. சில சமயங்களில் அப்பா நீங்கள் செய்ய வேண்டியது இது தான் என்று என்னிடம் கூறுவார்” என பெருமிதமாக கூறினார்.

மேலும் அவர் தனது மகன் பரோன் அரசியலால் கவரப்பட்டவர் என முன்னாள் ஜனாதிபதியான டொனால்டு டிரம்ப் தெரிவித்தார்.

CATEGORIES
Share This