மேற்குக் கரை அகதிகள் முகம் மீது இஸ்ரேல் தாக்குதல்; 18 பேர் பலி!

மேற்குக் கரை அகதிகள் முகம் மீது இஸ்ரேல் தாக்குதல்; 18 பேர் பலி!

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் உள்ள துல்கரேம் அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் குறைந்தது 18 பேர் கொல்லப்பட்டதாக பாலஸ்தீன சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இஸ்ரேலின் உள்நாட்டு பாதுகாப்பு சேவையான ஷின் பெட் உடன் ஒருங்கிணைந்து வியாழன் (03) அன்று அதன் போர் விமானங்கள் தாக்குதலை நடத்தியதாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது.

துல்கரேமில் உள்ள ஹமாஸின் உள்கட்டமைப்புத் தலைவரை குறிவைத்து தாக்குதல் நடத்தியதாக இராணுவம் பின்னர் வெளியிட்ட அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.

இஸ்ரேலிய இராணுவத்தின் கூற்று குறித்து பாலஸ்தீனிய குழு உடனடியாக கருத்து தெரிவிக்கவில்லை.

இது குறித்து ஒரு முகாம் அதிகாரி AFP செய்தி நிறுவனத்திடம், F-16 ஃபைட்டர் விமானம் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறினார்.

2023 ஒக்டோபரில் காசா பகுதியில் இஸ்ரேல் போரைத் தொடங்கியதில் இருந்து ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரை முழுவதும் இஸ்ரேலிய இராணுவத் தாக்குதல்கள் அதிகரித்துள்ளன.

ஐக்கிய நாடுகளின் மனிதாபிமான அலுவலகத்தின் (OCHA) கணக்கின்படி, கடந்த ஆண்டு ஒக்டோபர் 7 முதல் செப்டம்பர் இறுதி வரை மேற்குக் கரையில் 695 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

CATEGORIES
Share This