ட்ரம்பின் அரசாங்கத்தில் எலான் மஸ்க்கிற்கு முக்கியப் பொறுப்பு
அமெரிக்காவில் நவம்பர் மாதம் 05 ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் தான் வெற்றி பெற்றால் Tesla, SpaceX மற்றும் எக்ஸ் நிறுவனங்களின் தலைவரான எலான் மஸ்க் தலைமையில் அரசாங்கத் திறன் குழுவை நிறுவப் போவதாக குடியரசுக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
நியூயோர்க்கில் கருத்துரைத்த போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் இந்த யோசனையை பகிரங்கமாக ஏற்றுக்கொண்டது இதுவே முதல் முறையென சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
உள்நாட்டில் உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கான கார்ப்பரேட் வரி விகிதங்களைக் குறைக்கவும், கூட்டாட்சி நிலங்களில் குறைந்த வரி நிறுவனங்களை நிறுவவும், அங்கு கட்டுமான நிறுவனங்கள் மற்றும் புதிய வீடுகளைக் கட்டுவதாகவும் அவர் உறுதியளித்தார்.
முழு கூட்டாட்சி அரசாங்கத்தின் முழுமையான நிதி மற்றும் செயற்றிறன் தணிக்கையை நடத்தும் வகையில் ஒரு அரசாங்க செயல்திறன் ஆணையத்தை நான் உருவாக்குவேன் என்று ட்ரம்பின் முன்னாள் கருவூலச் செயலர் ஸ்டீவ் முனுச்சின் மற்றும் நிதியாளர்களான ஸ்காட் பெசென்ட் மற்றும் ஜான் பால்சன் ஆகியோர் அடங்கிய பார்வையாளர்களிடம் அவர் கூறினார்.
இந்த ஆணைக்குழு மோசடி மற்றும் முறையற்ற கொடுப்பனவுகளை அகற்றுவதற்கான திட்டத்தை உருவாக்கும் என்று கூறிய அவர் அத்தகைய ஆணைக்குழு எவ்வாறு செயல்படும் என்பதை டிரம்ப் விவரிக்கவில்லை.