ஐ.நா. சபையில் நிரந்தர உறுப்பு நாடாக இந்தியா இணைவதற்கு ரஷியா ஆதரவு

ஐ.நா. சபையில் நிரந்தர உறுப்பு நாடாக இந்தியா இணைவதற்கு ரஷியா ஆதரவு

ஐ.நா. பொதுசபையில் இந்தியாவை நிரந்தர உறுப்பு நாடாக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டு வரும் நிலையில் , இதற்கு அமெரிக்காஇ இங்கிலாந்துஇ பிரான்ஸ்இ போர்ச்சுகல் உள்ளிட்ட நாடுகள் ஆதரவு தெரிவித்தன. இந்த கருத்தை ஐ.நா. பொதுசபை கூட்டத்தில் வலியுறுத்தின.

இந்நிலையில் இந்தியாவை நிரந்தர உறுப்பு நாடாக்க ரஷியா ஆதரவு தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக ஐ.நா. பொதுச்சபையில் ரஷிய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் பேசும்போதுஇ சந்தேகத்திற்கு இடமின்றிஇ ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் உலகளாவிய தெற்கின் பிரதிநிதித்துவத்தை விரிவாக்க வேண்டிய அவசியம் உள்ளது. பிரேசில் மற்றும் இந்தியாவின் கோரிக்கையை ஆதரிப்பதாகவும், அதே நேரத்தில் ஆப்பிரிக்க ஒன்றியத்தின் முயற்சிகளை ஆதரிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

CATEGORIES
Share This