“பாகிஸ்தான் கர்மாவையே அனுபவிக்கிறது“: பாரிய விளைவுகளை ஏற்படுத்தும் என ஜெய்சங்கர் எச்சரிக்கை
பாகிஸ்தானின் எல்லைதாண்டிய தீவிரவாத நடவடிக்கைகள் ஒருபோதும் வெற்றியடையாது என்றும், இவ்வாறான நடவடிக்கைகள் பாரிய விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்தார்.
நியூயோர்க்கில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் 79வது பொதுச் சபை கூட்டத்தில் உரையாற்றிய போதே அவர் இதனைக் கூறினார்.
மேலும் பாகிஸ்தானின் தவறான நடவடிக்கைகள் அதன் சொந்த சமூகத்தையே பாதிப்பது ‘கர்மா’ என்று அவர் சுட்டிக்காட்டினார்.
இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர்,
“தற்போது இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினை பாகிஸ்தானால் சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்டிருக்கும் இந்திய பகுதிகளை உடனடியாக விடுவிப்பது .
பாகிஸ்தானின் எல்லைதாண்டிய பயங்கரவாதம் ஒருபோதும் வெற்றி பெறாது. அதற்கான தண்டனையிலிருந்து விடுபடவும் முடியாது.
எங்கள் இரு நாடுகளுக்கும் இடையில் தற்போது தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினை, பாகிஸ்தான் சட்டவிரோதமாக ஆக்கிரமித்து வைத்துள்ள இந்திய பகுதிகளை விடுவிப்பது மாத்திரமே” என்றார்.