மருமகனுக்காக 100 வகையான உணவு செய்த மாமியார்!

மருமகனுக்காக 100 வகையான உணவு செய்த மாமியார்!

ஆந்திராவில் வீட்டிற்கு வந்த மருமகனுக்கு 100 வகையான உணவுகளைச் செய்து பரிமாறி, மாமியார் அசத்தியுள்ளார்.

இது தொடர்பான விடியோ இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது.

ஆந்திர மாநிலம் காக்கிநாடாவைச் சேர்ந்தவர் ரவி தேஜா. இவர் கிர்லாம்பூடி மண்டலத்திற்குட்பட்ட, தாமரடா கிராமத்தைச் சேர்ந்த ரத்னகுமாரி என்பவரைக் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் திருமணம் செய்துகொண்டார்.

இந்நிலையில், ஆஷாதா மாதம் முடிந்து முதல்முறையாக வீட்டிற்கு வந்த மருமகனுக்கு ரத்னகுமாரி வீட்டில் விருந்து வைத்துள்ளனர். இதில், ரவி தேஜாவின் மாமியார் 100 வகையான பச்சரிசி உணவுகளைச் செய்து மருமகனுக்கு பரிமாறியுள்ளார்.

ஆஷாதா மாதம் என்பது தமிழில் ஆடி மாதம் போன்றதாகும். ஜூலை மாதத்தின் பிற்பாதியும் ஆகஸ்ட் மாதத்தின் முதல் பாதியும் ஆஷாதா மாதமாக ஆந்திரம், கர்நாடகம் போன்ற மாநிலங்களில் கடைபிடிக்கப்படுகிறது.

100 வகையான பிரமாண்ட விருந்து குறித்து பேசிய மருமகன் ரவிதேஜா, இனிப்பு, காரம் என 100 வகையான உணவுகளை ஒரே இடத்தில் கண்டது மகிழ்ச்சி என்றும், மாமியார் வீட்டின் இச்செயல் தன்னை மிகுந்த ஆச்சரியத்தில ஆழ்த்தியதாகவும் கூறினார்.

CATEGORIES
Share This