இஸ்ரேலின் பகுதியாக குறிப்பிடப்பட்ட காசா: ஆசிர்வாதம், சாபம் வரைபடங்கள் மூலம் நெதன்யாகு விளக்கம்

இஸ்ரேலின் பகுதியாக குறிப்பிடப்பட்ட காசா: ஆசிர்வாதம், சாபம் வரைபடங்கள் மூலம் நெதன்யாகு விளக்கம்

மத்திய கிழக்கில் நிலவும் மோதலுக்கு ஈரான் தான் காரணம் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு சுட்டிக்காட்ட முயசித்தார்.

காசா போருக்கு பின்னர் முதன்முறையாக ஐக்கிய நாடுகள் சபையில் கருத்து வெளியிட்ட அவர், தனது கைகளில் இரண்டு வரைபடங்களை வைத்திருந்தார்.

அந்த வரைபடங்களில் ஒரு சில நாடுகள் ‘சபிக்கப்பட்டவை’ என்றும், சில நாடுகள் ‘ஆசிர்வதிக்கப்பட்டவை’ என்றும் குறிப்பிடப்பட்டிருந்தன.

பலஸ்தீன பகுதியான மேற்கு கரை மற்றும் காசா, இஸ்ரேலின் பகுதியாக குறிப்பிடப்பட்டிருந்தமை சிறப்பம்சமாகும்.

இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவின் வலது கையிலிருந்த நாடுகளின் வரைபடத்தில் ஈரான், ஈராக், சிரியா மற்றும் ஏமன் நாடுகள் இடம்பெற்றிருந்தன. அவைகள் கருப்பு நிறத்தில் சுட்டிக்காட்டப்பட்டு ‘சபிக்கப்பட்டவை’ என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இடது கையில் வைத்திருந்த வரைபடத்தில் எகிப்து, சூடான், சவுதி அரேபியா, மற்றும் இந்தியா இடம் பெற்றிருந்தன. அவை பச்சை நிறத்தில் சுட்டிக்காட்டப்பட்டு, ஆசிர்வதிக்கப்பட்டவை என்று குறிப்பிடப்பட்டிருந்தன. சிரியாவின் கோலன் ஹைட்ஸ் பிராந்தியம் இஸ்ரேலின் பகுதியாக குறிப்பிடப்பட்டிருந்தது.

லெபனானின் ஹிஸ்புல்லாக்களின் இலக்குகள் மீது இஸ்ரேல் தீவிர தாக்குதல் மேற்கொண்டு வருகின்றது.

மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் பதற்றங்களுக்கு மத்தியல் உலக நாடுகள், ஆசீர்வதிக்கப்பட்டது அல்லது சபிக்கப்பட்டது இரண்டுக்கும் இடையில் ஒன்றை தேர்ந்தெடுக்க வேண்டும் என்று நெதன்யாகு தெரிவித்துள்ளார்.

நீங்கள் எங்களைத் தாக்கினால் நாங்களும் உங்களைத் தாக்குவோம் என நெதன்யாகு எச்சரிக்கை விடுத்தார்.

CATEGORIES
Share This