வெள்ளத்தில் மூழ்கிய நேபாளம்; 39 பேர் பலி; 200 இற்கும் அதிகமான வீடுகள் நீரில் மூழ்கின
நேபாளத்தில் பலத்த மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் இதுவரை 39 பேர் உயிரிழந்துள்ளனர்.
நேபாளத்தின் சில பகுதிகள் பலத்த மழை காரணமாக வெள்ளத்தில் மூழ்கின.
காத்மாண்டுவில் 9 பேரும், லலித்பூரில் 16 பேரும், பக்தபூரில் ஐவரும் கவ்ரேபாலன்சௌக்கில் மூவரும் பஞ்ச்தார் மற்றும் தன்குடாவில் தலா இரண்டு பேரும், ஜாபா மற்றும் தாடிங்கில் இருந்து தலா ஒருவரும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெள்ளத்தில் சிக்கி 11 பேர் காணாமல் போயுள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
காத்மாண்டுவில் 226 வீடுகள் நீரில் மூழ்கியுள்ள நீலையில் மீட்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
CATEGORIES உலகம்