‘அநுரவே கடைசி நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி’: தேசிய மக்கள் சக்தி அறிவிப்பு

‘அநுரவே கடைசி நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி’: தேசிய மக்கள் சக்தி அறிவிப்பு

தேசத்தின் கடைசி நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியை நாட்டு மக்கள் தெரிவு செய்துள்ளதாக தேசிய மக்கள் சக்தி அறிவித்துள்ளது.

அந்தக் கட்சியின் அரசியல் குழு உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி ஊடகங்களுக்கு இன்று கருத்து தெரிவிக்கையில் இவ்வாறு கூறியுள்ளார்.

இந்த ஜனாதிபதி பதவிக்கு பின்னர் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியை நாடு காணாது என உறுதியளித்தார். நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்கும் ஜனாதிபதி தற்போது நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த நோக்கத்திற்காக பொதுமக்கள் தங்களின் ஆதரவை வழங்குமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார். இதனிடையே, நாடாளுமன்றம் கலைக்கப்படும் எனவும் அது தொடர்பில் தீர்மானம் எடுக்கப்படும் உறுதிப்படுத்தியுள்ளார்.

“இது ஆரம்பம்தான். பிரஜைகளின் அங்கீகாரத்துடனும் உதவியுடனும் இந்த தேசத்தை கட்டியெழுப்புவோம்” என சுனில் ஹந்துன்நெத்தி மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, இலங்கையின் ஒன்பதாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார் திசாநாயக்க இன்று காலை பதவியேற்றுக்கொண்டார்.

நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் தேசிய மக்கள் சக்தி சார்பில் போட்டியிட்ட அவர் சுமார 56 லட்சம் வாக்குகளை பெற்று வெற்றிபெற்றிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
Share This