“அனுரவின் பதவிப் பிரமாணம் தேசத்திற்கு மங்களகரமான நேரம்“; தேசிய மக்கள் சக்தி புதிய அறிவிப்பு

“அனுரவின் பதவிப் பிரமாணம் தேசத்திற்கு மங்களகரமான நேரம்“; தேசிய மக்கள் சக்தி புதிய அறிவிப்பு

2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெறுவார் என நம்பப்படும் தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திசாநாயக்கவின் பதவிப் பிரமாணம் குறித்து தேசிய மக்கள் சக்தி இறுதித் தீர்மானத்தை எடுத்துள்ளது.

தேர்தலில் அனுர குமார திசாநாயக்க வெற்றி பெற்றுள்ளதாக கட்சி நம்புவதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் உத்தியோகபூர்வ அறிவிப்புக்காக காத்திருப்பதாகவும் தேசிய மக்கள் சக்தியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

பதவியேற்பு விழாவை ஜனாதிபதி செயலகத்தில் நடத்துவதற்கு கட்சி தீர்மானித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

நிகழ்விற்கான திகதி மற்றும் நேரத்தை தீர்மானிக்கும் அதிகாரம் கட்சிக்கு இல்லை என கூறிய அவர் தேர்தல்களின் இறுதி முடிவுகளை தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு உத்தியோகபூர்வமாக அறிவித்ததன் பின்னரே தீர்மானிக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

பதவியேற்பு விழா இன்று மாலை நடைபெறுமா அல்லது நாளை நடைபெறுமா என்பது தேர்தல்கள் ஆணைக்குழு உத்தியோகப்பூர்வமாக இறுதி முடிவுகளை அறிவித்த பின்னரே தீர்மானிக்கப்படும் எனவும் பதவியேற்பு நேரம் தேசத்திற்கு மங்களகரமான நேரமாக இருக்கும் என்றும் அவர் கூறினார்.

இதேவேளை, சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலை நடத்துவதற்கு தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தன்னால் இயன்றதை செய்து வருவதாகத் தெரிவித்த தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்தார்.

தேர்தல் முடிவுகளை வெளியிடுவதில் தாமதம் ஏற்படுவது வழக்கமான நடைமுறை என்பதால் பொதுமக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லையெனவும் கூறியுள்ளார்.

CATEGORIES
Share This