சஜித்துடன் இணைந்த ராஜபக்சவின் கட்சி உறுப்பினர்: சூடுபிடிக்கும் கொழும்பு அரசியல் களம்

சஜித்துடன் இணைந்த ராஜபக்சவின் கட்சி உறுப்பினர்: சூடுபிடிக்கும் கொழும்பு அரசியல் களம்

மகிந்த ராஜபக்ச தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அனுராதபுரம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கே.பி.எஸ்.குமாரசிறி, சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்துள்ளார்.

அனுராதபுரத்தில் நேற்று (16) நடைபெற்ற விவசாயிகள் மாநாட்டின் போதே அவர் ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்துகொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு இறுதிப் பகுதியில் ஜனாதிபதி தேர்தல் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்தக் காலப்பகுதியில் கட்சித் தாவல்கள் அதிகமாக இடம்பெறுகின்றன.

இதனால் கொழும்பு அரசியல் சமீப நாட்களில் சூடுபிடித்துள்ளதாக கொழும்பு அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

CATEGORIES
Share This