ராஜீவ்காந்தி கொலையில் விடுவிக்கப்பட்டுள்ள எஞ்சிய மூவரையும் ,உடனே இலங்கைக்கு அனுப்புங்கள் : தமிழக அரசு மனு தாக்கல்!

ராஜீவ்காந்தி கொலையில் விடுவிக்கப்பட்டுள்ள எஞ்சிய மூவரையும் ,உடனே இலங்கைக்கு அனுப்புங்கள் : தமிழக அரசு மனு தாக்கல்!

இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் படுகொலையுடன் தொடர்புடைய எஞ்சிய 3 இலங்கையர்களையும் உடனடியாக இலங்கைக்கு அனுப்ப உத்தரவிடுமாறு கோரி, தமிழக அரசு 04) நீதிமன்றத்தில் மனுவொன்றை சமர்ப்பித்துள்ளது.

7 பேருக்கு எதிராக கொலைக் குற்றம் சாட்டப்பட்டு , ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. ஆனாலும் சோனியா காந்தி மற்றும் காந்தி குடும்பத்தைச் சேர்ந்த பலர் அவர்களுக்கு ஆயுள் தண்டனை வழங்கக் கோரியதைத் தொடர்ந்து அவர்கள் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.

ஆனால் அவர்களில் 4 பேரையும் தமிழகத்தின் திருச்சி பகுதியில் உள்ள சிறப்பு முகாமில் தடுத்து வைத்து ஏனைய மூவரையும் தமிழகத்தில் உள்ள வீடுகளுக்கு அனுப்ப தமிழக அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.

திருச்சி முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சாந்தன், தாயாரைப் பார்க்க யாழ்ப்பாணம் செல்வதை , தமிழக அரசு இழுத்தடித்தமையால் , அவர் திடீரென உயிரிழந்தார். அதன்பின்னர் , இந்த மரணம் தொடர்பாக தமிழக அதிகாரிகள் மீது கடும் குற்றச்சாட்டுகள் எழுந்தன.

ராஜீவ்காந்தி படுகொலை வழக்கில் நீதிமன்றத்தினால் விடுவிக்கப்பட்ட சாந்தனை அனுப்பாமை தொடர்பில் , ஏற்பட்டுள்ள நிலை காரணமாக , விடுவிக்கப்பட்டும் , திருச்சி முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள எஞ்சிய 3 இலங்கையர்களான ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார் மற்றும் முருகன் ஆகியோரை உடனடியாக இலங்கைக்கு அனுப்ப, நீதிமன்றத்தை உத்தரவிடக்கோரி தமிழக அரசு ஒரு மனுவை தாக்கல் செய்துள்ளது.

CATEGORIES
TAGS
Share This