கடும் வறட்சி – 200 காட்டு யானைகளை கொன்று மக்களுக்கு உணவு

கடும் வறட்சி – 200 காட்டு யானைகளை கொன்று மக்களுக்கு உணவு

தென் ஆபிரிக்க நாடுகளில் நிலவும் வறட்சியினால் அங்குள்ள மக்கள் மிகவும் சிரமத்துக்குள்ளாகியுள்ளனர்.

இந்நிலையில் வறட்சியினால் ஏற்பட்டுள்ள உணவுப் பஞ்சத்தை சமாளிக்க கடந்த சில வாரங்களுக்கு முன்னர் சுமார் 700 வன விலங்குகள் கொல்லப்படவுள்ளதாக நமீபியா அரசு அறிவித்திருந்தது.

இந்நிலையில் நமீபியாவைத் தொடர்ந்து சிம்பாப்வேயிலும் யானைகளைக் கொலை செய்து மக்களுக்கு உணவளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

கடந்த வருடத்தில் மாத்திரம் 50 யானைகள் கொல்லப்பட்டுள்ளன. தற்சமயம் 200 காட்டு யானைகளைக் கொன்று அதன் இறைச்சியை மக்களுக்கு உணவாக வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலை தொடர்ந்தால் அப் பிரதேசங்களில் வன விலங்குகள் முற்றிலும் அழியும் அசாதாரண சூழ்நிலை ஏற்படும்.

CATEGORIES
Share This