விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை: 2-ம் சுற்று முடிவில் திமுக முன்னிலை

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை: 2-ம் சுற்று முடிவில் திமுக முன்னிலை

விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று (சனிக்கிழமை) காலை 8 மணிக்கு தொடங்கியது. இரண்டாம் சுற்றின் முடிவில் திமுக 12,002 வாக்குகளும், பாமக 5,904 வாக்குகளும், நாதக 849 வாக்குகளும் பெற்றுள்ளது. நோட்டாவுக்கு 78 வாக்குகள் பதிவாகியுள்ளது. திமுக 6098 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கிறது.

முன்னதாக முதலில் தபால் வாக்கை எண்ணும் பணி நடந்தது. அதில், முதல்வாக்கே கையெழுத்து இல்லாததால் செல்லாத வாக்காக அறிவிக்கப்பட்டது. தபால் வாக்குகள் எண்ணிக்கையின் முடிவில், திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா 130 வாக்குகளுடன் முன்னிலை பெற்றார். பாமக வேட்பாளர் சி.அன்புமணிக்கு 10 வாக்குகள் கிடைத்துள்ளன. நாம் தமிழர் வேட்பாளர் டாக்டர் அபிநயா 2 வாக்குகள் பெற்றார்.

தொடர்ந்து, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், இரண்டாம் சுற்றின் முடிவில் திமுக 12,002 வாக்குகளும், பாமக 5,904 வாக்குகளும், நாதக 849 வாக்குகளும் பெற்றுள்ளது. நோட்டாவுக்கு 78 வாக்குகள் பதிவாகியுள்ளது. திமுக 6098 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கிறது.

CATEGORIES
Share This