பரபரப்பாகும் ஜனாதிபதி தேர்தல் களம்: வெளிநாட்டு தலையிடுகள் முடுக்கிவிடப்பட்டுள்ளதாக தகவல்
இலங்கையில் ஜனாதிபதித் தேர்தல் நெருங்கி வரும் வேளையில் அதன் முடிவுக்காக மூன்று வெளிநாடுகளின் சதித் தலையீடுகள் முடுக்கிவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த மூன்று நாடுகளில் ஒரு நாடு மற்ற இரு நாடுகளை விட கடுமையாக உழைத்து வருவதாக அரசியல் வட்டாரங்களை மேற்கோள் காட்டி சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
எதிர்காலத்தில் குறித்த நாடுகளில் ஒன்று இலங்கையில் ஆதிக்கத்தை ஏற்படுத்தி தனது புவிசார் அரசியல் சூழ்நிலையை பயன்படுத்த முயற்சிக்கிறது.
அத்துடன், சில மேற்குலக சக்திகள் சர்வதேச நாணய நிதியம் மூலம் இலங்கையை கட்டுப்படுத்த கடுமையாக முயற்சி செய்கின்றன செய்கிறன.
குறிப்பாக பங்களாதேஷில் ஏற்பட்டுள்ள அண்மைக்கால சூழ்நிலை காரணமாக இந்த வெளிநாட்டு சக்திகள் தமது உத்திகளை முடுக்கிவிட்டிருக்கலாம் என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
இலங்கை ஜனாதிபதி தேர்தலில் ஒரு வேட்பாளரின் வெற்றியை உறுதி செய்யும் வகையில், அந்த வேட்பாளரின் தேர்தல் பிரசாரத்தை முன்னெடுத்துச் செல்லும் குழுக்களுக்கு வெளிநாட்டு பிரதிநிதிகள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இலங்கை ஜனாதிபதி தேர்தலில் அமெரிக்காவின் தலையீடுகள் இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச குற்றம் சுமத்தியிருந்தார்.
அதேபோல் இந்தியாவின் றோவின் தலையீடுகளும் அதிக இருப்பதாக கடந்த சில நாட்களாக செய்திகள் வெளியாகியிருந்தன.
இவ்வாறான பின்னணியிலேயே இந்த செய்தி வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.