போராட்ட புரட்சி வாசகங்கள் அடங்கிய ஆடை அணிந்த இளைஞன்; ஹாங்காங் நபருக்கு சிறை தண்டனை
போராட்ட புரட்சி வாசகங்கள் அடங்கிய ஆடையை அணிந்ததற்காக தேசத்துரோக குற்றத்தை ஒப்புக்கொண்ட ஹாங்காங் நபருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
இதன் மூலம், கடந்த மார்ச் மாதம் நிறைவேற்றப்பட்ட புதிய தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் தண்டனை விதிக்கப்பட்ட முதல் நபர் என்ற அடையாளத்தை 27 வயதான சூ கை பாங் பெற்றார்.
புதிய சட்டத்தின்படி, குற்றத்திற்கான அதிகபட்ச தண்டனை இரண்டு ஆண்டுகளில் இருந்து ஏழு ஆண்டுகளாக நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஜூன் 12 அன்று எம்டிஆர் நிலையத்தில், போராட்ட புரட்சி வாசகம் பொறிக்கப்பட்ட டி-சர்ட்டையும், முகமூடியையும் அணிந்ததற்காக சூ கை பாங் கைது செய்யப்பட்டார்.
இந்த போராட்ட புரட்சி வாசகங்கள் 2019 இல் ஜனநாயக ஆதரவு போராட்டங்களின் போது எழுப்பப்பட்ட ஒன்றாகும் என அந்நாட்டு ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
பல மாதங்கள் நீடித்த அமைதியின்மையின் முக்கிய நாளான ஜூன் 12 அன்று நடந்த போராட்டங்களை மக்களுக்கு நினைவூட்டுவதற்காக தான் டி-சர்ட்டை அணிந்ததாக சூ பொலிஸிடம் தெரிவித்துள்ளார்.
இந்நிலையிலேயே, சூ கை பாங் புதிய தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் தண்டனை தண்டனை பெற்றுள்ளார்.