திங்கட்கிழமை முதல் கடவுச்சீட்டு விநியோகம் ஆரம்பம்

திங்கட்கிழமை முதல் கடவுச்சீட்டு விநியோகம் ஆரம்பம்

2024 ஆம் ஆண்டு ஒக்டோபர் 21 ஆம் திகதி திங்கட்கிழமை முதல் கடவுச்சீட்டு விநியோகம் ஆரம்பிக்கப்படும் என அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் அறிவித்தார்.

நேற்று (15)காலை நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் அதனை தெரிவித்தார்.

இ-பாஸ்போர்ட் முறை தொடர்பான சட்ட சிக்கல்கள் குறித்தும் அமைச்சர் இதன்போது தெளிவுபடுத்தினார்.

இ-பாஸ்போர்ட் திட்டத்திற்கு ஒப்பந்தம் கோரப்படுவதை தடுக்கும் வகையில் தற்போது நீதிமன்ற தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார். நீதிமன்ற நடவடிக்கைகள் முடிவடைந்தவுடன் நாங்கள் இந்த விடயத்தை மறுபரிசீலனை செய்வோம் என்று ஹேரத் மேலும் கூறினார்.

750,000 கடவுச்சீட்டுகள் வந்தாலும், இந்த இருப்பு விரைவில் தீர்ந்துவிடும் என்று அமைச்சர் நம்பிக்ரக வெளியிட்டார்.

மற்றொரு சாத்தியமான கடவுச்சீட்டு பற்றாக்குறையைத் தவிர்க்க, வழக்கமான கடவுச்சீட்டுகளுக்கான கொள்முதல் செயல்முறையைத் தொடங்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

அதிகரித்து வரும் தேவைக்கு ஏற்ப கூடுதல் கடவுச்சீட்டுகளை ஒப்பந்தம் மூலம் இறக்குமதி செய்ய அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் ஹேரத் குறிப்பிட்டார்.

பாஸ்போர்ட் வழங்குவதில் ஏற்படும் இடையூறுகளைத் தடுக்கவும், பொதுமக்களின் தேவைகள் உடனடியாக நிறைவேற்றப்படுவதை உறுதி செய்யவும் அரசு முனைப்புடன் நடவடிக்கை எடுத்து வருவதாக அவர் இதன் போது மேலும் தெரிவித்தார்.

CATEGORIES
Share This