ஜே.வி.யின் இடைக்கால அரசாங்கம்: வடக்கு, கிழக்கு மற்றும் மலையகத்திருந்து அமைச்சுக்கள்

ஜே.வி.யின் இடைக்கால அரசாங்கம்: வடக்கு, கிழக்கு மற்றும் மலையகத்திருந்து அமைச்சுக்கள்

ஜனாதிபதித் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி வெற்றி பெற்றவுடன், இலங்கை அரசியல் அடையாளத்தை பிரதிபலிக்கும் வகையில் இடைக்கால அரசாங்கம் அமைக்க முடியும் என தேசிய மக்கள் சக்தியின் செயற்குழு உறுப்பினர் வசந்த சமரசிங்க தெரிவித்தார்.

அநுராதபுரத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறினார்.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர்,

“ வடக்கு மற்றும் கிழக்கின் முஸ்லிம் மற்றும் தமிழ் சமூகங்கள் மற்றும் மலையகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல்வாதிகளின் ஆதரவுடன் இடைக்கால அரசாங்கத்தை அமைக்க தேசிய மக்கள் சக்தி திட்டமிட்டுள்ளது.

நாங்கள் இலங்கை அரசாங்கத்தை உருவாக்க விரும்புகிறோம் சிங்கள அரசாங்கத்தை அல்ல. நாடாளுமன்ற உறுப்பினர்களும் அமைச்சர்களும் இல்லாத நியமனங்ளை வழங்கும் வரலாற்றின் முதல் அரசாங்கம் தேசிய மக்கள் சக்தி ஆகும்.

நாடாளுமன்றத்தில் உள்ள 222 உறுப்பினர்களில் வடக்கு, கிழக்கு மற்றும் மலையகத்தை சேர்ந்த சிறந்த நாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர், அவர்கள் இடைக்கால அரசாங்கத்திற்கு நியமிக்கப்படுவார்கள்.

ஆரம்பத்தில் எமது அமைச்சரவையில் தோழர் அனுர உட்பட நால்வர் இருப்பார்கள்.மேலும் விவாதங்களுக்குப் பிறகு, நாட்டின் பல்வேறு பகுதிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில், அமைச்சரவை ஏழு அல்லது எட்டு உறுப்பினர்களாக விரிவாக்கப்படலாம். ஒரே நேரத்தில் சரியாக 25 உறுப்பினர்களை நியமிக்க வேண்டும் என்ற கட்டாயம் அல்ல, என அவர் மேலும் தெரிவித்தார்.

CATEGORIES
Share This