உலகளவில் பெரிய போர் ; மற்றொரு பெருந்தொற்று: எச்சரிக்கிறார் பில்கேட்ஸ்
பருவ நிலை மாற்றம் மற்றும் சைபர் தாக்குதல்கள் குறித்து அடிக்கடி எச்சரித்து வந்த மைக்ரோசாப்ட் நிறுவனரும், நன்கொடையாளருமான பில்கேட்ஸ், தற்போது சர்வதேச அளவில் போர் மற்றும் பெருந்தொற்று ஏற்படக்கூடும் என எச்சரித்து உள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது,
இன்றைய உலகில் சில இடங்களில் ஏற்பட்டு உள்ள பதற்றமானது மற்றொரு பெரிய போருக்கு வழிவகுக்கக்கூடும். ஒருவேளை இதனை நாம் தவிர்க்க முயன்றாலும், மற்றொரு பெருந்தொற்று ஏற்படலாம். இது அடுத்த 25 ஆண்டுகளில் ஏற்படக்கூடும்.
உலகளவில் பெரிய பாதிப்பை ஏற்படுத்திய கோவிட் நிறைய பாடங்களை கற்றுக் கொடுத்தாலும், அது நாம் எதிர்பார்த்ததை விடக்குறைவு. எதில் நாள் அதிகம் கற்றுக் கொண்டோம். எங்கு பிரச்னை உள்ளது என்பதை நமது செயல்பாடுகள் முழுமையாக பிரதிபலிக்கவில்லை.
ஒரு வேளை, இது அடுத்த 5 ஆண்டுகளில் இது மேம்படும். ஆனால், இதுவரை அது இல்லாதது ஆச்சர்யம் அளிக்கிறது. உலகத்தை வழிநடத்தும் மற்றும் முன்மாதிரியாக இருக்கும் என அமெரிக்கா மீது எதிர்பார்ப்பு எழுந்தது. ஆனால், அதற்கேற்ப அந்நாடு செயல்படவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.