அலெக்சி நவால்னியின் மரணத்திற்கு புடினே பொறுப்பு : அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன்!

அலெக்சி நவால்னியின் மரணத்திற்கு புடினே பொறுப்பு : அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன்!

ரஷ்ய எதிர்க்கட்சி தலைவரின் மரணத்திற்கு அந்நாட்டு ஜனாதிபதி புடின் தான் முழுப் பொறுப்பேற்க வேண்டும் என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சி தலைவர் அலெக்சி நவால்னி ரஷ்ய ஜனாதிபதி புடினையும் அவரது கொள்கைகளையும் கடுமையாக விமர்சித்து வந்தமையால் அங்குள்ள இளைஞர்கள் மத்தியில் இவர் மீதான ஆதரவு பெருகியது.

அதனை தொடர்ந்து, கடந்த 2013இல் அவர் மீது பணமோசடி குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு, அவருக்கு 3 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

அத்துடன், பயங்கரவாதத்தை ஊக்குவித்தல், நீதிமன்ற அவமதிப்பு உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் அவருக்கு மொத்தம் 19 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

ஆகையால் அவருக்கு 19 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், கடந்த 2021ஆம் ஆண்டு முதல் அவர் சிறைத்தண்டனை அனுபவித்து வந்தார்.

இந்நிலையில், அவர் திடீர் என நேற்று சிறையில் உயிரிழந்தார்.

உக்ரைனுடனான போர் உள்ளிட்ட பிரச்சினைகளால் நாட்டு மக்களிடம் அதிருப்தியை சம்பாதித்துள்ள ஜனாதிபதி புடினுக்கு எதிர்க்கட்சி தலைவர் அலெக்சி நவால்னியின் மரணம் கூடுதல் சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.

CATEGORIES
TAGS
Share This