அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல்: கமலா ஹாரிஸ் வெற்றி பெறுவார்
“அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் கமலா ஹாரிஸ் வெற்றி பெறுவார்,” என்று பேராசிரியர் லிட்மன் தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு நான்கு ஆண்டுகளுக்கும் அவர் கணிப்பார். தேர்தலுக்கான முடிவுகளைக் கணிப்பார்.
1984ஆம் ஆண்டிலிருந்து, ஒரே ஒரு தேர்தலைத் தவிர மற்ற அனைத்துத் தேர்தல்களிலும் அவரது கணிப்பு தவறியதில்லை.
பேராசிரியர் லிட்மன் கருத்துக்கணிப்புகளில் கவனம் செலுத்துவதில்லை. தற்போதைய ஜனாதிபதித் தேர்தல் நிர்வாகத்திற்குப் பொருந்தும் உண்மை, பொய்க் கோட்பாடுகளின் அடிப்படையில் அவரின் கணிப்புகள் இடம்பெறுகின்றன.
இந்த நிலையில் அவர் ‘ஏஎஃப்பி’ யிடம் அவர் கூறியதாவது, ”எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் கமலா ஹாரிஸ் வெற்றி பெறுவார். அதற்கான வாய்ப்புகளே அதிகமாக உருவாகும்.” எனக் கூறியுள்ளார்.
CATEGORIES உலகம்