எல்லைக் கட்டுப்பாட்டை கடுமையாக்கும் ஜேர்மனி: சட்டவிரோத குடியேற்றத்தை தடுக்க முயற்சி

எல்லைக் கட்டுப்பாட்டை கடுமையாக்கும் ஜேர்மனி: சட்டவிரோத குடியேற்றத்தை தடுக்க முயற்சி

ஜேர்மனி அதன் எல்லைக் கட்டுப்பாடுகளை விரிவுப்படுத்தியுள்ளது.

இதன்படி, எதிர்வரும் 16ஆம் திகதி முதல் கட்டுப்பாடுகள் நடைமுறைக்கு வரும் என அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது.

கடந்த மாதம் சோலிங்கன் நகரில் மூன்று பேர் கத்திக்குத்து தாக்குதலில் கொல்லப்பட்ட சம்பவத்தை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த தாக்குதலை மேற்கொண்ட சந்தேகநபர் சிரிய பிரஜை ஆவார், அவரின் புகலிட கோரிக்கை மறுக்கப்பட்ட பின்னர் நாடுகடத்தப்படுவதையும் எதிர்கொண்டுள்ளார்.

எவ்வாறாயினும், இந்த தாக்குதலுக்கு இஸ்லாமிய அரசு அமைப்பு உரிமை கோரியிருந்தது.

இந்த விடயம் குறித்து ஜேர்மனிய உள்துறை அமைச்சர் நான்சி ஃபேசர் கருத்து வெளியிடுகையில்,

அரசாங்கம் ஒழுங்கற்ற குடியேற்றத்திற்கு எதிராக கடினமான நிலைப்பாட்டை எடுக்கிறது என்று வலியுறுத்தினார்.

மேலும் இந்த கட்டுப்பாடுகள் இஸ்லாமிய தீவிரவாதம் மற்றும் எல்லை தாண்டிய குற்றங்களை குறைக்கும் என நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

“இந்த அச்சுறுத்தல்களுக்கு எதிராக நாட்டு மக்களைப் பாதுகாக்க எங்களால் முடிந்த அனைத்தையும் செய்கிறோம்,” என்று அவர் மேலும் கூறினார்.

ஜேர்மனி ஏற்கனவே அதன் கிழக்கு மற்றும் தெற்கு எல்லைகளில் போலந்து, செக் குடியரசு, சுவிட்சர்லாந்து மற்றும் ஆஸ்திரியா ஆகியவற்றுடன் கட்டுப்பாடுகளைக் கொண்டுள்ளது.

முதன்மையாக சாலைகள் மற்றும் ரயில்களில் சோதனைகளை மேற்கொள்ப்படும். இதேபோன்ற நடவடிக்கைகள் அனைத்து எல்லை நிலையங்களிலும் அறிமுகப்படுத்தப்படும்.

எவ்வாறாயினும், இந்த நடவடிக்கை பாதுகாப்பை விட அரசியலைப் பற்றியது என்று விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.

2015-2016 புலம்பெயர்ந்தோர் நெருக்கடியின் போது சிரியா போன்ற நாடுகளில் போரில் இருந்து தப்பியோடிய ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்களை ஜேர்மனி உள்வாங்கியது.

மேலும் 2022 பெப்ரவரியில் ரஷ்யாவின் முழு அளவிலான படையெடுப்பு தொடங்கியதிலிருந்து 1.2 மில்லியன் உக்ரேனியர்களையும் உள்வாங்கிக்கொண்டது.

இதேவேளை, சோலிங்கன் நகரில் இடம்பெற்ற கத்திக் குத்து தாக்குதலை தொடர்ந்து அந்நாட்டு அரசாங்கம் இடம்பெயர்வுக்கான பல நடவடிக்கைகளை அறிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
Share This