ஜிமெயில் மூடப்படுகிறதா? வேகமாகப் பரவும் செய்தியின் பின்னணி?
ஜிமெயில் மூடப்படுவதாக சமூக ஊடங்களில் வேகமாகப் செய்திப் பரவி வரும் நிலையில், அதில் உண்மையில்லை என்று கூகுள் தெளிவுபடுத்தியிருக்கிறது.
ஜிமெயில் மூடப்படுவதாக மட்டுமல்ல, வரும் ஆகஸ்ட் 1ஆம் திகதியுடன் முடங்குகிறது என்று திகதியோடு புரளி ஒன்று சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.
பொதுவாக பழைய சேவைகளை மற்றும் பயன்பாட்டில் இல்லாத சேவைகளைத்தான் கூகுள் முடக்கும். அதில்லாமல், அதனை புதுப்பொலிவுடன் கொண்டு வரவும் நடவடிக்கை எடுக்கும். ஆனால், உலகம் முழுவதும் பயன்படுத்தப்பட்டு வரும் ஜிமெயில் மூடப்படவிருப்பதாக புரளி ஒன்று வேகமாக அதுவும் காட்டுத்தீ போல பரவி வருகிறது.
இது குறித்து கூகுள் விளக்கம் அளித்துள்ளது. ஜிமெயில் நிலைத்திருக்கும் என்று பதிலளிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டின் இறுதியில் ஜிமெயில் சேவையை நிறுத்த கூகுள் திட்டமிட்டிருப்பதாக இத் தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஜிமெயில் லெட்டர்பேடில் இந்த தகவல் இருப்பது போன்ற ஒரு புகைப்படம் இன்று பல சமூக ஊடகங்கள் வழியாக பயணித்து பலரின் அதிர்ச்சிக்கும் காரணமாக அமைந்தது.
இது முதலில் டிக்டாக் செயலியிலிருந்துதான் பரவியதாகவும் சிலர் குற்றம்சாட்டியுள்ளனர்.
உலகம் முழுவதுமிருப்பவர்களை பல ஆண்டுகளாக ஒன்றிணைத்து வரும் ஜிமெயில் பயணம் விரைவில் நிறைவு பெறவிருக்கிறது. வரும் ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் ஜிபெயில் அதிகாரப்பூர்வமாக மூடப்படுகிறது. அதன் சேவை அது முதல் இருக்காது என்றும் அந்த புகைப்பட புரளி தெரிவிக்கிறது.
இனி ஜிமெயில் மூலம் மின்னஞ்சல்களை அனுப்பவும் பெறவும் முடியாது என்றும் அதில் கூறப்பட்டிருந்தது.