பப்புவா நியூகினியாவில் 14 நாட்களுக்கு அவசரகாலநிலை!
பப்புவா நியூகினியாவில் 14 நாட்களுக்கு அவசரகாலநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ள நிலையில், அங்கு ஏற்பட்ட வன்முறை சம்பவங்களில் 15 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஆயிரத்துக்கும் மேற்பட்ட துருப்புக்கள் தேவையான இடங்களில் நிலை நிறுத்துவதற்கு தயாராகவுள்ளதாக அந்த நாட்டு பிரதமர் ஜேம்ஸ் மராப் தெரிவித்துள்ளார்.
வேதன பிரச்சினை காரணமாக அந்த நாட்டு காவல்துறையினர் நேற்றைய தினம் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து அங்குள்ள வர்த்தக நிலையங்கள் மற்றும் பல்பொருள் அங்காடிகள் என்பன உடைக்கப்பட்டு சூறையாடப்பட்டுள்ளன.
அத்துடன் பல இடங்களில் மோதல் சம்பவங்களும் பதிவாகியுள்ளன.
அதிகரித்து வரும் செலவுகள் மற்றும் அதிக வேலையின்மை காரணமாக பப்புவா நியூகினியாவில் பதற்ற நிலைமை தொடர்கின்றது.
இந்தநிலையில் ‘சட்டத்தை மீறுவதன் ஊடாக உரிய விளைவுகளை அடைய முடியாது என பப்புவா நியூகினியாவின் பிரதமர் தெரிவித்துள்ளார்.
காவல்துறையினர் மீண்டும் கடமைகளை ஆரம்பித்துள்ள நிலையில் பெரும்பாலான வன்முறை சம்பவங்கள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன.
எவ்வாறாயினும் அங்கு பதற்ற நிலைமை தொடர்வதாக தெரிவிக்கப்படுகிறது.