அனுரவின் பிரத்தியேக செயலாளர் பதவிக்கு ரணில் ஆசைப்படுகிறார்

அனுரவின் பிரத்தியேக செயலாளர் பதவிக்கு ரணில் ஆசைப்படுகிறார்

தீர்மானமிக்க ஜனாதிபதித் தேர்தலுக்கு இன்னும் இருப்பது சில தினங்களே என்பதால் வேட்பாளர்கள் தங்கள் பிரச்சார பணிகளை சிறப்பாகவே மேற்கொண்டு வருகின்றனர்.

தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தோற்றுப் போவதை ஏற்றுக் கொண்டதாகவும் அனுரகுமார திஸாநாயக்கவின் பிரத்தியேக செயலாளராக வருவதே ரணிலின் விருப்பம் எனவும் எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

நுவரெலியா தலவாக்கலையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துக் கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர்,

” தற்போதைய ஜனாதிபதியின் பொழுதுபோக்கு தபால் காரியாலத்தை விற்பது தான். இந்த நுவரெலியா தபால் காரியாலயத்தை கூட விற்பதற்கு கூட முயற்சிக்கிறார். எனினும், 21ஆம் திகதி வெற்றியின் பின்னர் நான் நுவரெலியாவுக்கு வருவது தபால் நிலையத்தை விற்பதற்காக அல்ல. லயன் அறைகளுக்குள் மட்டுப்படுத்தப்பட்ட தோட்டத் தொழிலாளர்களை மற்றும் வேலையில்லாமல் இருக்கும் இளைஞர்களை சிறு தோட்ட உரிமையாளர்களாக மாற்றுவேன். அதேபோல், ஜனாதிபதி அவர் தோற்றுப்போவதை ஏற்றுக் கொண்டு விட்டார். அனுரகுமாரவின் பிரத்தியேக செயலாளராக இருப்பதையே அவர் விரும்புகிறார்.

இப்போதும் கூட ஜனாதிபதியும் , அனுரகுமாரவும் இணைந்து என்னை தோற்கடிக்க பணத்தை செலவழித்து வருகின்றனர். யாரு என்ன செய்தாலும் பொது மக்கள் என்னை வெற்றி பெறச் செய்வார்கள் என்பதில் எனக்கு நம்பிக்கை உண்டு.

தோட்டத் தொழிலாளர்களுக்கு வீடு

200 வருடங்களுக்கும் அதிகமான வரலாற்றைக் கொண்ட தோட்டத் தொழிலாளர்கள் வியர்வை கண்ணீர் சிந்தி நாட்டின் பொருளாதாரத்திற்கு வழங்கிய ஆதரவை மறந்து விட முடியாது. அந்த வலிமையைப் பாராட்டுகிறோம்.

அதேபோல், அவர்களும் நாட்டின் குடிமக்களாக ஏற்றுக் கொள்ளப்படுகிறார்கள். பெருந்தோட்ட சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியலுக்கு உரிய பிரதிநிதித்துவம் அளித்து காணி, வீடு, உரிமையை வழங்கி அதனை உறுதிப்படுத்தி லயன் அறைகளுக்கு பதிலாக தனியான கிராம வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படும்.

தேர்தல் காலத்தில் தோட்டத் தொழிலாளர்களின் கூலியாக பத்தாயிரம், ஆயிரத்து ஐநூறு, இரண்டாயிரம் தருவதாக பொய்யான வாக்குறுதிகள் வழங்கப்படுகின்றன.

லயன் அறைகளில் தங்கி கூலித் தொழிலாளியாக வாழ்க்கையைக் கழிக்கும் இம்மக்களுக்கு இளைஞர் சமூகத்தின் நலன் கருதி விவசாய நில உரிமை வழங்கப்பட்டு சிறு தேயிலைத் தோட்ட உரிமையாளர்களாகவும் மாற்றப்படுவார்கள்.

பாடசாலை அமைப்பை மேம்படுத்துதல்

முன்பள்ளித் துறையிலிருந்து கல்வி முறை உருவாக்கப்பட்டு மேம்படுத்தப்பட்டுள்ளது.

நல்ல கல்வியை வழங்குவதற்கும் பாடசாலை அமைப்புகளை வலுப்படுத்துவதற்கும் உறுதி கொள்ளப்பட்டுள்ளது.

அதேபோன்று, பல புதிய தேசிய பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டு, சிங்கள தமிழ் முஸ்லிம் என அனைவரின் கல்வி மற்றும் சுகாதாரத் துறையை மேம்படுத்தப்படும்.

இதற்கு மேலதிகமாக நுவரெலியா இளைஞர்களுக்காக புதிய பல்கலைக்கழகம் ஒன்று நிறுவப்பட்டு அதன் மூலம் தொழில்முனைவு கற்பிக்கப்படவுள்ளதுடன் புதிய தொழில்களும் ஆரம்பிக்கப்படும்.” எனத் தெரிவித்தார்.

CATEGORIES
Share This