ரணில், மகிந்தவை மீண்டும் இணைக்க முயற்சி: களத்தில் முக்கியப் புள்ளி

ரணில், மகிந்தவை மீண்டும் இணைக்க முயற்சி: களத்தில் முக்கியப் புள்ளி

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஆதரவை கோரி மஹிந்த ராஜபக்சவுடன் மேலதிக கலந்துரையாடலில் ஈடுபடுமாறு பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ச

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் உத்தியோகபூர்வமாக கோரிக்கை விடுத்துள்ளார்.

ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற சந்திப்பின் போதே அவர் எழுத்துமூலக் கோரிக்கை விடுத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கோரிக்கை தனது தனிப்பட்ட யோசகனை எனவும் அவர் கூறியுள்ளார்.

ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் மஹிந்த ராஜபக்சவை நேரடியாகவோ அல்லது விசேட கூட்டமொன்றின் ஊடாகவோ சந்தித்து இறுதிச் சுற்று கலந்துரையாடலை மேற்கொள்ளுமாறு பிரதி சபாநாயகர் வலியுறுத்தியுள்ளார்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பாக ஒருவரை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்துவதற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் இல்லத்தில் கடந்த திங்கட்கிழமை இடம்பெற்ற சந்திப்பில் தீர்மானிக்கப்பட்டது.

இந்த சந்திப்பின் பின்னர் ரணில் விக்ரமசிங்கவுக்கு தமது ஆதரவு இனி இருக்காது என பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்திருந்தார்.

ஆனாலும் பொதுஜன பெரமுனவின் முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள் 116 பேர் ரணிலை ஆதரிக்கும் ஆரம்பகட்ட அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். விரைவில் மேலும் பலர் தமது ஆதரவை மாவட்ட ரீதியாக வழங்க உள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவித்தது.

அதேபோன்று உள்ளூராட்சிமன்றங்களின் முன்னாள் உறுப்பினர்களும் ரணிலை ஆதரிக்கும் நிலைப்பாட்டில் இருப்பதாக தெரியவருகிறது.

CATEGORIES
Share This