கனடாவில் சம்பளம் அதிகரிப்பு: அதிருப்தியில் புலம் பெயர் தமிழர்கள்
கனடாவில் மணித்தியால சம்பள அதிகரிப்பு கோடைக்காலத்தில் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறைந்தபட்ச சம்பள அதிகரிப்பு குறித்து பொருளாதார நிபுணர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.
ஒன்டாரியோ உள்ளிட்ட பல பகுதிகளில் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி முதல் சம்பளம் அதிகரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கனடா நுனாவுட் பகுதியில் அதிகூடிய சம்பளத்தொகையாக 19 டொலர்கள் காணப்படுகின்றது.
கனடாவில் மிகவும் சம்பளம் குறைவான மாகாணமாக சஸ்காச்சுவான் கருதப்படுகின்றது.
இந்நிலையில் சஸ்காச்சுவான் மாகாணத்தில் குறைந்தபட்ச மணித்தியால சம்பளம் 02 டொலர்களால் அதிகரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறைந்தபட்ச சம்பள அதிகரிப்பானது வரவேற்கத்தக்கது என்ற போதிலும் போதுமான அளவு சம்பளம் அதிகரிக்கப்படவில்லையென கூறப்படுகின்றது.
வாழ்க்கைச் செலவு அதிகரிப்புக்கு மத்தியில் சம்பள அதிகரிப்பு போதுமானதாக இல்லையென குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
கனடாவில் புலம்பெயர் தமிழர்கள் அதிகம் வாழ்ந்து வரும் நிலையில் வீட்டு வாடகை அதிகரிப்பு மற்றும் பொருட்களின் விலை உயர்வால் பெரிதும் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர்.