விக்கி சொல்வதைத் தமிழர்களே கேட்பதில்லை; நான் அவரையெல்லாம் கண்டுகொள்வேனா?

விக்கி சொல்வதைத் தமிழர்களே கேட்பதில்லை; நான் அவரையெல்லாம் கண்டுகொள்வேனா?

நாடாளுமன்ற உறுப்பினர் விக்னேஸ்வரன் சொல்வதைத் தமிழர்களே கேட்பதில்லை. நான் அவரையெல்லாம் கண்டுகொள்வேனா என தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்க கேள்வி எழுப்பினார்.

தேர்தல் பரப்புரைகளுக்காக வடக்கு மாகாணத்துக்கு வருகை தந்த அவர், ஊடகவியலாளர்களிடம் கருத்துரைக்கும்போதே மேற்கண்டவாறு கூறினார்.

அண்மையில் கருத்துத் தெரிவித்திருந்த நாடாளுமன்ற உறுப்பினர் விக்னேஸ்வரன்,

“அனுரகுமார ஜனாதிபதியாகத் தெரிவானால் நாட்டின் பொருளாதாரத்தை முன்னோக்கி கொண்டு செல்வதற்கான திட்டங்களோ அல்லது சர்வதேச ஒத்துழைப்பையோ அவரால் பெறமுடியாது.

நாட்டின் பொருளாதாரத்தை கட்டி எழுப்ப வேண்டுமானால் அவர்கள் சீனாவின் உதவியை நாட வேண்டிய தேவை ஏற்பாடும். ஏற்கனவே நாடு சீனாவின் கடன்பொறிக்குகள் சிக்கியுள்ள நிலையில் நாட்டு மக்கள் அதனை விரும்ப மாட்டார்கள்“ என்று விமர்சித்திருந்தார்.

இதற்குப் பதிலடியாகவே, “விக்னேஸ்வரன் கூறுவதைத் தமிழர்களே பொருட்படுத்துவதில்லை. நான் ஏன் பொருட்படுத்த வேண்டும்” என்று அநுர தெரிவித்துள்ளார்.

“இன்றைய உலகில் எந்தவொரு நாட்டையும் சார்ந்திருக்காமல் ஒன்றும் செய்ய முடியாது. அரசுகள் இன்னொரு அரசுகளுக்குத்தான் ஆதரவை வழங்குகின்றன.

தனி நபருக்கு அல்ல. ஆதலால், இந்தியாவுடன் நெருக்கமாகப் பணியாற்ற வேண்டிய விடயங்களில் நான் இந்தியாவுடன் நெருக்கமாகவே பணியாற்றுவேன்.

சீனாவுடன் நெருக்கமாகப் பணியாற்ற வேண்டிய விடயங்களில் நான் சீனாவுடன் நெருக்கமாகவே பணியாற்றுவேன்.” – என்றார்.

CATEGORIES
Share This