தமிழரசு கட்சியின் முடிவு – தேர்தல் களத்தில் மாற்றம்: அரியநேத்திரன் வெற்றிபெற முடியாது என்கிறார் சுமந்திரன்

தமிழரசு கட்சியின் முடிவு – தேர்தல் களத்தில் மாற்றம்: அரியநேத்திரன் வெற்றிபெற முடியாது என்கிறார் சுமந்திரன்

பொது வேட்பாளர் பா.அரியநேத்திரன் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதால் தமிழ் சமூகத்திற்கு எந்த நன்மையும் கிடைக்காது என இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரிப்பதற்கு தமிழரசு கட்சி எடுத்த முடிவை தொடர்ந்து வடக்கு மற்றும் கிழக்கில் அரசியல் இயக்கம் கணிசமான அளவில் மாறியுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.

தொலைக்காட்சி ஊடகம் ஒன்றில் இடம்பெற்ற நேர்காணலில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

சஜித் பிரேமதாசவை ஆதரிப்பதற்கு நாங்கள் முடிவு செய்தமையால், வடக்கி – கிழக்கின் பெரும்பான்மையான வாக்குகள் சஜித்துக்குத்தான் கிடைக்கும்..

தற்போது ஐக்கிய மக்கள் சக்தியின் சஜித் மற்றும் தேசிய மக்கள் சக்தியின் அனுரகுமார திஸாநாயக்க ஆகிய இருவரே முக்கிய வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்.

“நாங்கள் சஜித்தை ஆதரிக்க முடிவு செய்துள்ளோம்,” என்று எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

எனினும், பொது தமிழ் வேட்பாளரை நிறுத்தும் யோசனையை சுமந்திரன் நிராகரித்தார், அத்தகைய வேட்பாளர் ஜனாதிபதியாக வெற்றிபெற வாய்ப்பில்லை என்பதால் இது தவறான உத்தி என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பா.அரியநேத்திரன் தேர்தலில் போட்டியிடுவதால் தமிழ் சமூகத்திற்கு எந்த நன்மையும் கிடைக்காது எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

2019 தேர்தலில் நாங்கள் சஜித்தை ஆதரித்தோம், 2024ஆம் ஆண்டிலும் அவருக்கு ஆதரவளிப்போம் என சுமந்திரன் மேலும் குறிப்பிட்டார்.

முன்னதாக சஜித், அனுர மற்றும் ரணில் விக்கிரமசிங்க மத்தியில் வாக்குகள் பிளவுபட்டிருந்த நிலையில், சஜித்துக்கு அதரவளிக்க தமிழரசு கட்சி எடுத்த முடிவினார் இப்போது தேர்தல் களம் மாறியுள்ளது என்றும் அவர் கூறினார்.

சஜித்துடன் முறையான உடன்பாடு இல்லை என தெரிவித்த அவர், “எங்களுக்கு அனுரவை நன்றாகத் தெரியாது எனவும் ரணிலையும் நாங்கள் நன்கு அறிந்துள்ளதால் அவரை நிராகரித்தோம் எனவும் கூறியுள்ளார்.

கடந்த காலங்களில் தமிழர்கள் ராஜபக்சக்களுக்கு எதிராக வாக்களித்ததால் ரணில் வடக்கு மக்களின் வாக்குகளை வென்றார்.

ஆனால் தற்போது அவர் ராஜபக்ச அணியுடன் இணைந்திருப்பதால், ரணில்-ராஜபக்ஷ கூட்டணிக்கு எங்கள் மக்கள் ஆதரவளிக்க மாட்டார்கள் என மேலும் கூறியுள்ளார்.

CATEGORIES
Share This