சீனாவை நோக்கி நகரும் புயல்: பல பகுதிகளுக்கு எச்சரிக்கை

சீனாவை நோக்கி நகரும் புயல்: பல பகுதிகளுக்கு எச்சரிக்கை

இந்த ஆண்டின் மிகவும் சக்திவாய்ந்த புயல்களில் ஒன்று தெற்கு சீனாவை நோக்கி நகர்வதுடன், இன்று பிற்பகுதியில் அது பிரபலமான சுற்றுலா தீவான ஹைனானில் கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால், மாகாணத்தில் இரண்டாவது நாளாக ரயில்கள், படகுகள் மற்றும் விமான சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன. அதே நேரத்தில் பல பகுதிகளிலுள்ள மக்களுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த வார தொடக்கத்தில் வடக்கு பிலிப்பைன்ஸில் அழிவை ஏற்படுத்திய பின்னர் யாகி (Yagi) சூறாவளியின் பலம் இரட்டிப்பாகியுள்ளது.

தற்சமயம் அதன் வேகம் மணிக்கு 240 கிலோ மீற்றர் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இது, சீனாவின் அதிக மக்கள்தொகை கொண்ட மாகாணமான ஹைனான் மற்றும் அண்டை நாடான குவாங்டாங்கில் “பேரழிவு” சேதத்தை ஏற்படுத்தக்கூடும் என்று வானிலை ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

சூறாவளி எச்சரிக்கையை தொடர்ந்து ஹைனானில் உள்ள அதிகாரிகள் புதன்கிழமை முதல் அனைத்து சுற்றுலா தலங்களையும் மூட உத்தரவிட்டுள்ளனர்.

இப்பகுதியின் சில பகுதிகளில் வியாழக்கிழமை முதல் பலத்த மழை மற்றும் சூறைக்காற்று வீசுகிறது.

அங்கு 500 மி.மீ. வரை மழை பெய்யும் என சீனாவின் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

1949 முதல் 2023 வரை ஹைனானில் வீசிய 106 சூறாவளிகளில் ஒன்பது மட்டுமே சூப்பர் டைபூன்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளதாக ரொய்ட்டர்ஸ் செய்திச் சேவை தெரிவித்துள்ளது.

CATEGORIES
Share This